உலகம் முழுக்க இன்று மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. ஏனெனில் எல்லாதுறையிலும் தன்னால் முடிந்த மட்டில் ஒரு வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவிலும் அது தன்னுடைய வேலையை மிக வேகமாகவும் துரிதமாகவும் செய்து வருகிறது. சொல்லப்போனால் இந்தியாவில் மட்டும் சுமார் 12,38,635 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,861 பேர் பலியாகியுள்ளனர். ஆக மொத்தத்தில் இந்தியாவினை ஒரு ஆட்டு ஆட்டிப்படைத்து வருகிறது எனலாம்.

இந்த நிலையில் அது மின்சார துறையினையும் விட்டு வைக்கவில்லை எனலாம். ஏனெனில் 2025ம் ஆண்டில் கொரோனா தாக்கம் காரணமாக மின்சார தேவை 7 - 17% வரை குறையக்கூடும் என்கிறது ஓர் அறிக்கை.
இது குறித்து வெளியான எக்னாமிக் டைம்ஸ் செய்தியில், டெரி அமைப்பானது இந்தியாவில் மின்சாரம் தேவையானது 7 - 17% வரை குறையக்கூடும் என்று கணித்துள்ளது. இந்தியாவில் அதிகளவு மின்சாரத்தினை பயன்படுத்தும் மாநிலங்களில் 5 முதல் 15 சதவீதம் வரையில் மின்சார தேவையானது வீழ்ச்சி காணும் என்றும் தெரிவித்துள்ளது.
எப்படி இருப்பினும் லாக்டவுனால் எந்தவித பிரச்சனையும் இல்லை என மத்திய மின் அமைச்சர் ஆக் கே சிங் கூறியுள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் மின்சார தேவையானது அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். லாக்டவுன் இருந்தபோதிலும் கூட நாங்கள் புத்துயிர் பெற்றோம். நீண்ட காலத்திற்கு மின்சார தேவை பாதிக்கப்படுவதை காணவில்லை. இது மெதுவான வேகத்தில் வளரும். ஆனால் விரைவில் திரும்பி வரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வணிகத் துறையில் நீடித்து வரும் மந்த நிலை, நிதி நிலைமை, தொடர்ச்சியான வளர்ச்சியின் முடக்க நிலை முக்கியமான பிரச்சனைகளாக இருக்கலாம் என்றும் அறிக்கை கூறியுள்ளது. எனினும் இந்த ஆய்வு கீழ் நோக்கிய திருத்தத்தினை நிராகரிக்கவில்லை. மிகவும் மோசமான போக்குடன் ஒப்பிடும்போது அதன் சரிவை விலக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.
உன்மையில் நாம் நினைக்கக்கூடும். மின்சார துறைக்கும் கொரோனாவால் பிரச்சனையா என்று? உண்மையில் பிரச்சனை உண்டு. ஏனெனில் லாக்டவுன் காரணமாக இன்னும் பெரும் பகுதிகளில் பெரும்பாலான நிறுவனங்கள் இயங்க ஆரம்பிக்கவில்லை. அப்படி சில பகுதிகளில் இயங்கி வந்தாலும், அவற்றிற்கும் பல கட்டுப்பாடுகள். ஆக எந்த தொழில் சாலைகளும், நிறுவனங்களும் முன்பைபோல சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஆக மின்சார உபயோகத்தில் நிச்சயம் துண்டு விழும் என்பதை தான் நிபுணர்கள் தற்போது கணித்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications