கடந்த சில நாட்களாக பல்வேறு துறைகளிலும் 2025-ஆம் ஆண்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற செய்திகள் வெளியாகி மகிழ்ச்சியை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் 2027-ஆம் ஆண்டுக்குள் 1.2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், இதில் மூன்று மில்லியன் நேரடி வேலை வாய்ப்புகளும், 90 லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் இருக்கும் என்று சனிக்கிழமை வெளியான "TeamLease Degree Apprenticeship" என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி வேலை வாய்ப்புகளில் ஏறக்குறைய 10 லட்சம் பொறியாளர்கள், 20 லட்சம் ITI சான்றளிக்கப்பட்ட தொழில் வல்லுனர்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற டேட்டா சார்ந்த துறைகளில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தொழில்நுட்பம் அல்லாத பணிகளில் 90 லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சிக்கான போக்கை தொடர்கிறது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் உற்பத்தியை அடையும் நோக்கில் எலக்ட்ரானிக் துறை செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய அடுத்த 5 ஆண்டுகளில் 5 மடங்கு வளர வேண்டும். அதற்கு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தற்போது உள்நாட்டு உற்பத்தி 121 பில்லியன் டாலராக உள்ளது.
இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் துறை மொத்த ஏற்றுமதியில் 5.3 சதவீதத்திற்கு பங்களிக்கிறது. இவற்றில் LED பல்புகள், சாதனங்கள் போன்ற புதிய துறைகளும் விரைவாக வளர்ந்து வருகின்றன. இந்தியா உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் மையமாக மாறும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் டீம்லீஸ் நிறுவனத்தின் CSO அதிகாரியான சுமித் குமார் கூறியுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் துறை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகள் வருகின்ற 2025-ஆம் ஆண்டில் 15 முதல் 20 சதவீத வரை அதிகரிக்கும் என்று டேலண்ட் சொல்யூஷன்ஸ் என்எல்பி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மிசின் லேர்னிங், டேட்டா அனாலிடிக்ஸ், கிளவுட் டெக்னாலஜி போன்ற பல்வேறு ரோல்களுக்கான தேவை இனிவரும் நாட்களில் 30 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோவிட் காலத்தில் பெருவாரியான ஊழியர்கள் வேலை இழந்தனர். அதன் பிறகு இனிவரும் நாட்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று வெளியாகி இருக்கும் செய்தி பலருக்கும் நிம்மதியை வழங்கி இருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications