இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன (EV) சந்தை வேகமாக வளர்ந்து வரும் வேளையில் மத்திய அரசு பல வருடங்களாக இத்துறையில் கிங்மேக்கராக இருக்கும் டெஸ்லா-வை இந்தியாவுக்கு கொண்டு வரவும், ஆசியாவுக்கான உற்பத்தி தளமாக இந்தியா இருக்க வேண்டும் என மத்திய அரசு எலான் மஸ்க்-கிடமும், டெஸ்லா நிர்வாகத்திடமும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அனைத்த முயற்சிகளும் தோல்வி அடையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனரக தொழில்துறை அமைச்சரான குமாரசாமி திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, "டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி செய்யாமல், வெறுமனே விற்பனை ஷோரூம்-களை திறந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்க விரும்புகிறது." என டெஸ்லா தரப்பின் முடிவை தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் இந்த முடிவு, இந்திய சந்தையில் எலகட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தாலும், இப்பிரிவை மேம்படுத்துவதற்கு மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் மத்திய அரசின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்து மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், "எலக்ட்ரிக் பயணிகள் கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு (SPMEPCI) விரைவில் விண்ணப்பங்கள் பெறப்படும்," என்றார். இந்தத் திட்டம் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, டெஸ்லா கைவிரித்த காரணத்தால் மத்திய அரசு பெரும் சலுகையுடன் மிகப்பெரிய சலுகையை SPMEPCI திட்டத்தின் கீழ் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறத.
ஐரோப்பாவின் மெர்சிடிஸ்-பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன் (VW), தென் கொரியாவின் ஹூண்டாய், கியா மற்றும் வியட்நாமின் வின்ஃபாஸ்ட் ஆகியவை இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஆர்வம் காட்டியுள்ளன. உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையான இந்தியாவில், இந்நிறுவனங்கள் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கு தயாராக உள்ளன.
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது சந்தை தரவுகளை வைத்து உறுதி செய்ய முடியும். 2020-இல் வெறும் 5,000 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், 2024-இல் இது 1,13,000 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையானது.
தற்போது மொத்த கார் விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் 3% மட்டுமே என்றாலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 30% ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி, உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய இலக்காக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வின்பாஸ்ட் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைத்து உற்பத்தி பணிகளை துவங்க காத்திருக்கும் வேளையில் டெஸ்லா இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளது பிற நிறுவனங்களுக்கும், பிற முதலீடுகளுக்கும் மத்திய அரசு முக்கியதுவம் அளிக்கப்படும்.
மேலும் எலான் மஸ்க் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டாம் என முடிவு செய்ய முக்கிய காரணமாக இருப்பது டொனால்டு டிரம்ப்-ன் அடுத்தடுத்து கொண்டு வந்த நெருக்கடி தான். இந்தியாவில் வெளிநாட்டு கார்களுக்கான இறக்குமதி வரி 100 சதவீதமாக உள்ளது, இது மிகவும் மோசம் என டிரம்ப் விமர்சனம் செய்தார், இதேபோல் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களுக்கு அதிகப்படியான வரியும் விதித்து அதை திரும்ப பெற்றார். இதனால் எலான் மஸ்க் நிர்வாகத்தால் நீண்ட கால அடிப்படையில் முடிவு எடுக்கப்படவில்லை.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications