உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவருடைய நெருங்கிய கூட்டாளியாக மாறி டிரம்ப் 2.0 நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதன் மூலம் அமெரிக்காவில் செயல்படுத்தப்படும் கொள்கைகளில் அதிகாரம் அளிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் துவங்கப்படவுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.
இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. டெஸ்லாவுக்கு இதனால் ஈர்ப்பு குறைவாகவே உள்ளது. EV மற்றும் பேட்டரி துறையும் வளர்ந்து வருவதால் இந்தியாவில் பயணிகள் மின்சார வாகன தயாரிப்பாளர்கள் தொடர்ந்து புதிய வாகனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் எலான் மாஸ்க் மோடியை சந்தித்து விட்டு இந்தியாவிற்கு வரவிருந்தார். ஆனால் இந்த பயணத்தை தனது அவசர வேலையின் காரணமாக எலான் மஸ்க் ரத்து செய்தார். இந்தியாவில் புதிய இவி கொள்கையின் மூலம் வெளிநாட்டுக் கார் உற்பத்தியாளர்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு எலான் மஸ்க் தனது வருகையை அறிவித்தார். அதோடு சுமார் 41.5 மில்லியன் ரூபாயை முதலீடு செய்து 3 ஆண்டுகளுக்குள் இவி உற்பத்தியை தொடங்க இருப்பதாகவும் கூறி இருந்தார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஏனெனில் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்தியாவுக்கு மஸ்க் வரவிருந்த பயணத்தை ரத்து செய்தார் அவருடைய குழுவினர் டெல்லி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையும் நிறுத்திவிட்டனர் என்று விஷயம் குறித்து நன்கு தெரிந்த சிலர் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தனர். அதோடு எலான் மஸ்க்குக்கு நிதி பிரச்சனைகள் இருப்பதாகவும் இதன் காரணமாக முதலீடு செய்ய தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் உலக அளவில் 2-வது காலண்டில் விற்பனைச் சரிவை சந்தித்தது. அதோடு சீன நிறுவனங்களுடன் கடும் போட்டியை எதிர்கொண்டது. இதனால் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்த ஆர்வத்தை மஸ்க் இழந்ததாகவும் கூறப்படுகிறது. 3-ஆம் காலாண்டிலும் சீனா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுடன் கடுமையான போட்டி நிலவியது. இதனால் டெஸ்லா குறைந்த அளவிலான வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு.
எனவே இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் வருவது குறித்த தெளிவான முடிவு இன்னும் எடுக்கப்படாத நிலையில், இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சந்தை மந்தநிலையில் இருந்த போதிலும் தங்களுடைய விற்பனையை அதிகரிக்க ஓடிக்கொண்டிருக்கின்றனர். மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இதில் BE 6e மற்றும் XEV 9e போன்ற மின்சார எஸ்யூவிகள் அடங்கும்.
டாட்டா மோட்டார்ஸ் பயணிகள் எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் தனது புதிய மாடல்களான Curvv.ev மற்றும் Nexon.ev ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீப காலமாக மகேந்திரா மற்றும் டாடா இணைந்து ஈவி சந்தையில் தங்கள் வளர்ச்சியை மேம்படுத்த அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதனால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான எஸ்யூவி எலக்ட்ரிக் கார்களுக்கான போட்டி அதிகரித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் ஒரு வேலை இந்தியாவிற்கு வந்தால் இந்தியாவில் உள்ள மின்சார வாகன தயாரிப்பாளர்களுடன் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications