கடந்த வியாழக்கிழமை அன்று யூனியன் மினிஸ்டரான நிதின் கட்கரி இந்தியன் மின்சார வாகன சந்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 20 லட்சம் கோடியை தொடும் என்றும், இதனால் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது மின்சார வாகனத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுடைய பெட்ரோல் டீசல் வாகனங்களோடு EV வாகனங்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்தியாவில் 40% காற்று மாசுபாடு போக்குவரத்து துறையால் ஏற்படுவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக EV வாகனங்களுக்கு தற்போது வங்கிகளிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

"ஒவ்வொரு வருடமும் ரூ. 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலன எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம். இது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. மேலும் எரிபொருட்களை இறக்குமதி செய்வது நம் நாட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மின்சார தேவை 44 சதவீதம் சூரிய சக்தியிலிருந்து பெறப்படுவதால் பசுமை எரிசக்தியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதோடு மின்சார இருசக்கர வாகனங்கள் மின்சார நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது. ஆனால் இன்னமும் மின்சார பேருந்துகள் இல்லாமல் இருக்கிறது.
அதோடு மின்சார வாகன உற்பத்தியாளர்கள் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. நம் நாட்டிற்கு தற்போது 1 லட்சம் மின்சார பேருந்துகள் தேவைப்படுகின்றன. எனவே உங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த இதுவே சரியான நேரம். 2014-ஆம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் அளவு 7 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது.
ஆனால் தற்போது ஆட்டோமொபைல் துறையின் அளவு 22 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. உலக அளவில் நாம் 3-வது இடத்தில் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஜப்பானை மிஞ்சிவிட்டோம். அமெரிக்காவில் ஆட்டோமொபைல் துறையின் அளவு 28 லட்சம் கோடி. அதை தொடர்ந்து சீனா, பிறகு மூன்றாவது இடத்தில் 22 லட்சம் கோடியோடு இந்தியா உள்ளது என்றும் கூறியுள்ளார். EV சந்தை தொடர்ந்து வளர்ந்து வருவது இனிவரும் காலங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications