அக்டோபரில் ஏற்றுமதி 5.4% சரிவு தான்.. ஆனால் ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கு..!

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 5.4 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதத்திற்கான, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி குறித்தான தரவினை வெளியிட்டுள்ளது.

அதன் படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 5.4 சதவீதம் குறைந்து, 24.82 பில்லியன் டாலாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியில் சரிவு

ஏற்றுமதியில் சரிவு

இந்த ஏற்றுமதியில் பெட்ரோலியம் பொருட்கள், ஜெம் & ஜூவல்லரி, லெதர் மற்றும் பொறியியல் பொருட்கள் உள்ளிட்டவை சரிவினை கண்டுள்ளதாகவும் பட்டியலிட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியினை கண்ட பிறகு, அக்டோபரில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் வர்த்தக பற்றாக்குறையும், 8.78 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முன்னர் 11.76 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதியும் வீழ்ச்சி

இறக்குமதியும் வீழ்ச்சி

ஏற்றுமதி சரிந்துள்ள இந்த நேரத்தில், இறக்குமதியும் 11.56 சதவீதம் சரிந்து, 33.6 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மெர்சன்டைஸ் ஏற்றுமதி அக்டோபரில் 24.82 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 26.23 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 5 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது என்று வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெள்ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பொருட்கள்? எவ்வளவு ஏற்றுமதி?

எந்தெந்த பொருட்கள்? எவ்வளவு ஏற்றுமதி?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் ஏற்றுமதியானது, அக்டோபரில் சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக பெட்ரோலியம் பொருட்கள் 53.30 சதவீத சரிவினையும், முந்திரி 21.57%, ஜெம்ஸ் & ஜூவல்லரி 21.27 சதவீத சரிவினையும், லெதர் பொருட்கள் 16.69 சதவீத சரிவினையும், யார்ன்/பேப்ரிக்ஸ்/ 12.82 சதவீதமும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியானது 12.82 சதவீதமும், காஃபி 9.25 சதவீதமும், கடல் பொருட்கள் 8.09 சதவீதமும், இதே பொறியல் பொருட்கள் 3.84 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதி அதிகரிப்பு

இதே அரிசி, எண்ணெய் உணவு, இரும்பு தாது, எண்ணெய் விதைகள், தரைவிரிப்பு, மருந்துகள், மசாலா பொருட்கள், பருத்தி மற்றும் கெமிக்கல்ஸ் ஏற்றுமதி சற்று சாதகமாக ஏற்றுமதியினை கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் - அக்டோபரில் ஏற்றுமதி 19.05 சதவீதம் சரிந்து, 150.07 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 182.29 பில்லியன் டாலர்களாக இருந்தது கவனிக்கதக்கது.

எண்ணெய் இறக்குமதி சரிவு

எண்ணெய் இறக்குமதி சரிவு

எண்ணெய் இறக்குமதியானது அக்டோபர் மாதத்தில் 38.52 சதவீதம் குறைந்து, 5.98 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் - அக்டோபர் மாதத்தில் இறக்குமதி 49.5 சதவீதம் குறைந்து, 37.84 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. முந்தைய ஆறு மாத சரிவுக்கு பின்னர் கடந்த செப்டம்பரில் தான் 5.99% ஏற்றம் கண்டு, 27.58 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது கவனிக்கதக்க விஷயமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+