டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி விகிதமானது கடந்த செப்டம்பர் மாதத்தில், அமெரிக்காவுக்கு 10.7% சரிவினைக் கண்டுள்ளது.
இதே சீனாவுக்கான ஏற்றுமதி விகிதமானது 45.8% குறைந்துள்ளது. மொத்தத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி விகிதமானது, கடந்த செப்டம்பர் மாதத்தில் 3.5% சரிவினைக் கண்டுள்ளது.
இந்த சரிவானது பெரியளவில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் இன்ஜினியரிங், ஆடைகள் மற்றும் பருத்தி நூல் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ளது.
முக்கிய சந்தைகளில் ஏற்றுமதி சரிவு
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கருத்தின் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பங்களாதேஷ் உட்பட 10 சந்தைகளில் ஆறு சந்தைகளில் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதில் முக்கிய 30 கமாடிட்டிகளில் 18 கமாடிட்டிகள் சரிவினைக் கண்டுள்ளன.
தேவை சரிவு
கொரோனா காரணமாக சீனா மற்றும் ஹாங்காங்கில் தேவை சரிவினைக் கண்டுள்ள நிலையில், ஸ்டீல் மீதான 15% வரிக்கு மத்தியில், இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியில் 17% சரிவினைக் கண்டுள்ளது.
சிஎஸ்ஐ நாடுகளுக்கான இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி, ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் ஆர்மீனியா - அஜர்பைஜான் பதற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வளர்ச்சி
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி - -10.7 சரிவினைக் கண்டுள்ளது. இதே UAE-க்கான ஏற்றுமதி- -1.9% சரிவினையும், நெதர்லாந்துக்கு 19.6% அதிகளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதே சீனாவுக்கு ஏற்றுமதி - -45.8% குறைந்தும், சிங்கப்பூருக்கான ஏற்றுமதியானது 54.6% அதிகரித்தும், பங்களாதேஷ்-க்கான ஏற்றுமதி விகிதமானது - -38.4% சரிவினைக் கண்டுள்ளது. இதே இங்கிலாந்தின் ஏற்றுமதி - -9.5% சரிவினைக் கண்டுள்ளது.
எதிர்பார்ப்பு
இந்தியாவின் ஏற்றுமதியானது ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால், சீனாவிற்கான இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதியானது குறைந்துள்ளது.
எனினும் இந்த நிலை டிசம்பருக்கு பிறகு ஆடைகள் ஏற்றுமதியானது ஏற்றம் கண்டுள்ளது. இதே பருத்தி நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு, ஒரு ஒழுங்குமுறையை இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
எப்போது நிலை மாறும்
தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மேற்கொண்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். முதலீட்டாளர்கள் டிசம்பரில் இருந்து இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
இவ்வளவு சரிவா?
கடந்த ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் பருத்தி நூல், துணிகள் ஏற்றுமதியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 21% சரிவினைக் கண்டுள்ளது. இதே கைவினை பொருட்கள் ஏற்றுமதியானது, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 30.5% சரிவினைக் கண்டுள்ளது. இதே தரை விரிப்புகள் ஏற்றுமதியானது 19.1% சரிவினைக் கண்டும் காணப்படுகிறது.
இலக்கு
இந்தியா நடப்பு நிதியாண்டில் 470 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதியினை செய்ய இலக்கினை வைத்துள்ளது. எனினும் அக்டோபர் 3 நிலவரப்படி வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, 2022 - 23ல் 229.05 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை இந்தியா செய்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 15.54% அதிகமாகும்.
அரசின் கருத்து என்ன?
சில வளர்ந்த பொருளாதார நாடுகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தேவையானது பல நாடுகளில் சரிவினைக் கண்டுள்ளது. இது இந்தியாவில் ஏற்றுமதியினை பாதித்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications