டெல்லி: இந்தியாவிலும் கொரோனா அதன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது மக்களின நலன் கருதி அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருந்தாலும், மறுபுறம் தொழில்துறைகள், உற்பத்தி ஆலைகள், நிறுவனங்கள் என பலவும் முடங்கியுள்ளன.
தற்போது பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் முழுமையாக செயல்படவில்லை என்றே கூறலாம். அதிலும் கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து அத்தியாவசிய தேவை தவிர, மற்ற எவையும் இயக்கப்படவில்லை.
உற்பத்தி வீழ்ச்சி
இப்படி இருக்கும் சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி 16.7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி இந்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே, இந்தளவு உற்பத்தி குறைந்து எனில், இனி ஏப்ரல் மாதத்தில் எப்படி வரப்போகிறதோ தெரியவில்லை.
முழுமையாக செயல்படவில்லை
எனினும் தற்போது அளிக்கப்படுள்ள சில தளர்வுகளினால் சில நிறுவனங்கள் மீண்டு வந்து கொண்டிருந்தாலும், முழுமையாக இன்னும் செயல்பட இன்னும் சிறிது காலம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக நிறுவனங்களுக்கு இது சவலான காலம் தான். ஏனெனில நிறுவனங்களில் பணப்புழக்கம் குறைந்து விட்டது, மேலும் சில துறைகளில் நிறுவனங்களுக்கு தேவையான மூலதனம் கிடைக்க வில்லை. இன்னும் சில நிறுவனங்கள் உற்பத்தி செய்திருந்தாலும், உலகம் முழுவதிலும் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை வியாபாரம் செய்யமுடியவில்லை.
தேவையும் சரிவு
இதற்கிடையில் உலகம் முழுக்க கொரோனா பரவியுள்ள நிலையில் தேவையும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2019ம் நிதியாண்டில் உற்பத்தி விகிதம் 3.8 சதவீதமாக இருந்த நிலையில், 2020ம் நிதியாண்டில் -0.7 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே மாத வாரியாக பார்க்கும் போது கடந்த ஜனவரியில் 2.08 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 4.62 சதவீதமாக அதிகரித்தது. ஆனால் மார்ச் மாதத்தில் வரலாறு காணாத அளவு -16.65 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
எந்த துறையில் எவ்வளவு வளர்ச்சி?
இதல் உற்பத்தி துறையானது -20.6 சதவீத வீழ்ச்சியுடனும், இதே மின் சாரம் -6.8 சதவீதமும், இதே சுரங்கம் 0%, கேப்பிட்டல் கூட்ஸ் -35.6%மும், இதே நுகர்வோர் உபயோகப்படுத்தும் நீடித்த பொருட்களுக்கான வலர்ச்சி -33.1%மும், இதே நுகர்வோர் அல்லாத பொருட்கள் -16.2% வளர்ச்சியுடனும் உள்ளதாக வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications