நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 1% வளர்ச்சி.. இது போதுமா?

டெல்லி: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறித்தான குறியீடு கடந்த டிசம்பர் மாதத்தில் 1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த வளர்ச்சி போதுமா? என்றால் நிச்சயம் போதாது தான். ஆனால் முந்தைய மாதங்களில் மைனஸில் இருந்த வளர்ச்சி விகிதமானது, தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதே நல்ல விஷயம் தானே.

இது குறித்து புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறித்தான குறியீடு 1.9 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது. ஆனால் இது டிசம்பர் மாதத்தில் 1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே உற்பத்தி வெளியீடு 1.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆக இது மிக நல்ல விஷயம் தானே.

நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 1% வளர்ச்சி.. இது போதுமா?

எனினும் சுரங்க உற்பத்தியானது டிசம்பர் மாதத்திலும் 4.8 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. எனினும் இது ஆய்வில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பயன்பாட்டு அடிப்படையிலான தொழில்களில், முக்கிய குறிகாட்டியான மூலதன பொருட்கள் வளர்ச்சி 0.6 சதவீதமும், இதே நீடித்த நுகர்வோர் பொருட்கள் வளர்ச்சியானது 4.6 சதவீதம் வளர்ச்சியும் கண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய பொருளாதாரம் 7.5% சுருங்கியது. இது கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் காணப்பட்ட 23.9 சதவீத சரிவினை விட சற்று குறைந்துள்ளது. எனினும் மெதுவான வளர்ச்சியினை இது சுட்டிக் காட்டுகின்றது. இது கொரோனா தொற்று நோய்க்கு பின்னர் இந்த சரிவு ஏற்பட்ட நிலையில், 2021ம் ஆண்டில் 7.7 சதவீதம் வீழ்ச்சி இருக்கலாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நடப்பு நிதியாண்டின் பிற்பாதியில் அதாவது அக்டோபர் - மார்ச் வரையிலான காலகட்டத்தில் 0.6% வளர்ச்சியினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தனது கண்னோட்டத்தில் சமீபத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது அடுத்து வரும் தடுப்பூசிகளுக்கு மத்தியில் வளர்ச்சி விகிதம் இருக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது.

மேலும் விவசாயத் துறையில் தேவை மிதமாக இருக்கலாம். கொரோனா தடுப்பூசி, கொரோனா வழக்குகள் சரிவு, இவற்றுடன் மீண்டும் நகர்புற தேவை மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இவை இனி வரும் மாதங்களில் இன்னும் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+