ரூ.24,000 கோடி பிஸ்னஸ்.. லாபத்தை அள்ளிய அமேசான், ஃபிளிப்கார்ட்..!! இந்த ஒரு பொருள் தான் காரணம்..!!

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஈ காமர்ஸ் தளங்களில் மாபெரும் தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. பல்வேறு பொருட்களும் வழக்கத்தை விட குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் ஏராளமான இந்தியர்கள் போட்டி போட்டு கொண்டு அமேசானிலும், ஃபிளிப்கார்ட்டிலும் பொருட்களை வாங்குகின்றனர்.

புகழ்பெற்ற கன்சல்டன்சி நிறுவனமான Redseer Strategy Consultants வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த தள்ளுபடி விற்பனை தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே நாட்டின் ஒட்டுமொத்த ஈ-காமர்ஸ் விற்பனை சுமார் 24,000 கோடி ரூபாயை எட்டியுள்ளதாம். அமேசான் , ஃபிளிப்கார்ட் , மீஷோ , அஜியோ உள்ளிட்ட பல்வேறு ஈ காமர்ஸ் தளங்களில் மொத்தம் 8 முதல் 9 கோடி ஆர்டர்கள் வந்துள்ளன. இது வழக்கமான வணிக நாட்களின் தினசரி அளவை விட 6 மடங்கு அதிகம் என ரெட்ஸீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.24,000 கோடி பிஸ்னஸ்.. லாபத்தை அள்ளிய அமேசான், ஃபிளிப்கார்ட்..!! இந்த ஒரு பொருள் தான் காரணம்..!!

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பண்டிகை கால ஆன்லைன் விற்பனை வளர்ந்து கொண்டே வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது. ஸ்மார்ட் போன், ஆடை ஆபரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகபபொருட்கள் என அனைத்து பிரிவுகளிலும் விற்பனை அள்ளுகிறதாம்.

குறிப்பாக, இரண்டாம் நிலை மற்றும் சிறிய நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பண்டிகை கால ஆடைகளை வாங்குவதால் Value Fashion துறை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் முதல் 2 நாட்கள் தள்ளுபடி விற்பனையில் எந்த பொருட்கள் எல்லாம் அதிகம் விற்பனை செய்யப்பட்டன என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.

1. ஸ்மார்ட் போன்ப்: எப்போதும்போல இம்முறையும் விற்பனை மதிப்பு அடிப்படையில் ஸ்மார்ட்போன்களே முதலிடத்தை பிடித்துள்ளன. ஒட்டுமொத்த விற்பனையில் இது 38 முதல் 40 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதாவது 9,100 கோடி முதல் 9,600 கோடி ரூபாய் வரை மொபைல் போன்கள் விற்கப்பட்டுள்ளன.

Also Read

2. எலக்ட்ரானிக்ஸ் : ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 25 முதல் 27 சதவீதத்தை எலக்ட்ரானிக்ஸ் பெற்றுள்ளது. தோராயமாக 6,000 முதல் 6,500 கோடி ரூபாய் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நடந்துள்ளது. லேப்டாப்கள் மற்றும் IoT சாதனங்களின் விற்பனை வழக்கமான நாட்களை விட 14 மடங்கு வரை உயர்ந்தது.

3. ஃபேஷன் பொருட்கள்: பேஷன் பொருட்களின் GMV (Gross Merchandise Value) முந்தைய ஆண்டை காட்டிலும் 22 முதல் 25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த விற்பனையில் இது 15 முதல் 18 சதவீத பங்கு கொண்டுள்ளது. அதாவது 3,630 முதல் 4,350 கோடி ரூபாய் வரை ஆடைகள் விற்கப்பட்டுள்ளன. இதில் Gen Z தலைமுறையினர் மட்டும் முதல் நாள் ஷாப்பிங்கில் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

Recommended For You

4. பெரிய சாதனங்கள் மற்றும் டிவிகள்: தொலைக்காட்சி , குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஏசிகள் ஆகியவை பெரிய உபகரணங்களின் விற்பனையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக பங்களித்துள்ளன. குறிப்பாக, TCL, LG, Samsung மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகளின் 55 இன்ச் திரை மாடல்கள் அதிக விற்பனையான டிவிகளாக உள்ளன.

இந்த ஆண்டு அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் Quick Commerce வர்த்தக பிரிவுகள் மூலமாக ஆர்டர்களை விரைவாக டெலிவரி செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளன. இந்த ஆண்டு ஆன்லைன் ஷாப்பிங் செய்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் இரண்டாம் நிலை மற்றும் கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் என அந்த அறிக்கை சுட்டுக்காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+