இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

இந்தியாவில் தற்போது சிலிண்டர் பிரச்சனை தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எல்பிஜி வருவது தடைப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகப் பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. ஆலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கான எல்பிஜி விநியோகமும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

இந்த சூழலில் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியும் நகர்ப்புறங்களுக்கு 25 நாட்கள் கிராமப்புறங்களுக்கு 45 நாட்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே இது 21 நாட்களாக தான் இருந்தது. மத்திய அரசு கண்டிப்பாக முன்பதிவு செய்த அனைவருக்குமே எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும் தட்டுப்பாடு இல்லை என தொடர்ச்சியாக கூறிவருகிறது. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்து,10 நாட்கள் ஆகியும் தங்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை என தொடர்ச்சியாக புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர்.

இந்த சூழலில் தான் சிலிண்டர் டெலிவரி செய்வதற்கான முதல் ஏடிஎம் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. டெல்லி அருகே இருக்கக்கூடிய குருகிராம் பகுதியில் முதல் எல்பிஜி ஏடிஎம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பாரத் கேஸ் நிறுவனம் சோனா பகுதியில் எல்பிஜி ஏடிஎம் மிஷினை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி நாம் நம்முடைய காலி சிலிண்டரை கொண்டு சென்று கன்ஸ்யூமர் எண், மொபைல் எண் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து பணம் செலுத்தினாலே போதும் 2 நிமிடங்களில் புது சிலிண்டர் கிடைத்துவிடும்.

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

புதிய எல்பிஜி ஏடிஎம் மூலம் நீங்கள் இரண்டே நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் பெற்று வீட்டுக்கு செல்லலாம், புக் செய்துவிட்டு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த எல்பிஜி ஏடிஎம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. பாரத் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் ஒரு முன்னோட்டமாக இந்த எல்பிஜி ஏடிஎம் இயந்திரம் தொடங்கப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு இதில் ஓடிபி மூலம் லாகின் செய்து யுபிஐ முறையில் பணம் செலுத்தி விட வேண்டும். இதனை அடுத்து காலி சிலிண்டரை உள்ளே வைத்தால் , 2 நிமிடங்களில் கேஸ் நிரப்பப்பட்ட புது சிலிண்டர் கிடைக்கும். ஆனால் இது ஃபைபரால் செய்யப்பட்ட குறைந்த எடை கொண்ட சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஃபைபரால் செய்யப்பட்ட சிலிண்டர்கள் மொத்தமே 15 கிலோ எடை கொண்டதாக தான் இருக்கும் ஆனால் பாரம்பரியமாக நாம் பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் , கேஸும் சேர்த்து மொத்தம் 31 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஃபைபரால் செய்யப்பட்ட சிலிண்டர்ள் எடை குறைவு என்பதால் வாடிக்கையாளர்களே அதனை எளிதாக கொண்டு வந்து நிரப்பி கொண்டு செல்ல முடியும் என பாரத் கேஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிதாக சிலிண்டர் கனெக்சன் வேண்டும் என்பவர்கள் கூட இந்த ஏடிஎம் இயந்திரம் வாயிலாகவே விண்ணப்பம் செய்ய முடியுமாம். கூடிய விரைவில் இது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+