இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை இந்த நகரத்துல தான் தயாரிக்கப் போறாங்களாம்..!!

பெங்களூர்: மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பெங்களூரில் தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது . ஐசிஎஃப் (ICF) சார்பாக செப்டம்பர் 5ஆம் தேதி இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இதன்படி 8 பெட்டிகள் கொண்ட இரண்டு அதிவேக ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.

ஐசிஎஃப் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இவை 8 பெட்டிகள் கொண்ட ரயில்களாக இவை இருக்கும் என்றும் இவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 280 கிலோமீட்டர் என்றும் இதன் செயல்பாட்டு வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரும் கடைசி தேதி 19ஆம் தேதி உடன் முடிவடைந்து விட்டது. இந்த ரயில் பெட்டிகள் பெங்களூரில் உள்ள பிஈஎம்எல் (BEML) யூனிட்டில் தயாரிக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை இந்த நகரத்துல தான் தயாரிக்கப் போறாங்களாம்..!!

ஐசிஎஃப் சென்னையின் பொது மேலாளர் சுப்பா ராவ் இது தொடர்பாக மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், 8 பெட்டிகள் கொண்ட இரண்டு அதிவேக ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில் பிஈஎம்எல் நிறுவனம் மட்டுமே பங்கேற்றது எனக் கூறியுள்ளார்.

2 ரயில்களுக்கான சிறிய ஆர்டர் என்பதால் பெரிய நிறுவனங்கள் இதில் போட்டியிடவில்லை எனவே பிஈஎம்எல் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் இந்த ரயில் பெட்டிகள் தயாரித்து முடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிஈஎம்எல் நிறுவனம் ஒரு ரயிலுக்கு 200 முதல் 250 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள இதன் நிலையத்தில் தயாரிக்கப்படும் இந்த புல்லட் ரயில்கள் மும்பை அகமதாபாத் அதிவிரைவு ரயில் பாதையில் இயக்கப்படும் என தெரிகிறது.

முதல் கட்டமாக ஜப்பானை சேர்ந்த ஷின்கான்சன் ரயில் நிறுவனம் தான் புல்லட் ரயில்களை தயாரித்து வழங்குவதாக இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் ஒரு ரயிலுக்கு 450 கோடி ரூபாய் வரை விலை கேட்டதால் ரயில்வே துறை அமைச்சகம் உள்நாட்டிலேயே இந்த அதிவக ரயில்களை தயாரித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தது.

பிஈஎம்எல் நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது அது மட்டும் இன்றி மேதா நிறுவனம் propulsion system அமைப்பதில் திறன் கொண்டது. ஏற்கனவே மேதாவின் propulsion system அடிப்படையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் தன்மை கொண்டவை தற்போது மேதா நிறுவனம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய propulsion system அமைப்புகளை உருவாக்கி பிஈஎம்எல்-க்கு வழங்க உள்ளன.

2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்கள் தயாரிக்கும் முதல் ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. இந்த ரயில் பெட்டிகள் சூரத் பிலிமோரா ரயில் பாதையில் சோதனை செய்யப்பட உள்ளன. எட்டு பெட்டிகள் கொண்ட அதிவிரைவு ரயில்களாக இருக்கும் என்றும் 3+2 என்ற வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+