ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் இந்தியாவின் முதல் கிரீன் ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. ஜென்சால் இன்ஜினியரிங் மற்றும் ஹைட்ரஜன் இன்ஃபிராஸ்டிரக்சர் டெவலப்பர் மேட்ரிக் கேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதல் கிரீன் ஹைட்ரஜன் நிலையத்தை அமைக்க உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இது அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்தத் திட்டப்பணிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி கிரீன் ஹைட்ரஜன் நிலையம் சொந்தமாக கட்டமைத்து சொந்தமாக செயல்படுத்துவது என்ற அடிப்படையில் செயல்படும் என தெரிகிறது. ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பிரிவில் 20 ஆண்டுகளுக்கு தேவையான ஹைட்ரஜனை இது விநியோகம் செய்யும் என ஜென்ஸால் இன்ஜினியரிங் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கிரீன் ஹைட்ரஜன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் செக்டாருக்கு நாள்தோறும் கிரீன் ஹைட்ரஜனை விநியோகம் செய்வதுதான் தங்களது இலக்கு இன இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அன்மோல் ஜக்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஒப்பந்த புள்ளி கோரிய போது பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டதாகவும் இதில் தொழில்நுட்ப ரீதியாகவும் கமர்ஷியல் ரீதியாகவும் கிரீன் ஹைட்ரஜன் உருவாக்க நிலையத்தை எலெக்ட்ரோலைட்டுகள் வழியில் அமைக்கும் தங்களது திட்டம் தான் வெற்றி பெற்றது என மேட்ரிக் கேஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனராக செயல்படக்கூடிய சிராக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தான் ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் இந்தியாவின் முதல் பயோ ஹைட்ரஜன் திட்டத்தை பெற்றது. மேலும் குஜராத் மாநிலத்தில் சோலார் மின் உற்பத்தி திட்டத்தையும் கைப்பற்றியது. கடந்த மாதம் தான் ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் அமெரிக்கா சந்தையிலும் கால் பதித்தது.
ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்தை பொருத்தவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முக்கியமான ஒரு நிறுவனமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் 4700 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் திட்ட பணிகளை கையில் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 920 ரூபாய் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications