இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு லாஜிஸ்டிக்ஸ் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும், நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கனவுகளை அடைய போக்குவரத்து செலவுகளைப் பெரிய அளவில் குறைக்க வேண்டும் அதேவேளையில் பல்வேறு பிரிவுகளில் சரக்குப் போக்கவரத்தை எளிமையாக்க வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவின் முதல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் சென்னையில் அமைக்கப்படுகிறது மத்திய அரசு. இதற்காக மத்திய அரசுடன் மாபெரும் ஒப்பந்தத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெள்ளிக்கிழமை ரிலையனஸ்-க்கு அளித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாடு முழுவதும் அதிநவீன பல்வகை உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அரசின் NMP திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
பல வகைத் தளவாட பூங்கா
நாட்டின் முதல் multi-modal logistics park அதாவது பல வகைத் தளவாட பூங்கா-வை மத்திய அரசு சென்னையில் மப்பேடு பகுதியில் 184.27 ஏக்கரில் உருவாக்கப்பட உள்ளது. இதை மாபெரும் திட்டத்தை அமைக்கும் ஒப்பந்தத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது.
சென்னை
சென்னையில் அமைக்கப்படும் இந்தப் பல வகைத் தளவாட பூங்கா-விற்கு மே 26, 2022 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது. இது சுமார் 1,424 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமாகும்.
முக்கியச் சேவைகள்
இத்திட்டத்தின் வாயிலாகச் சிறப்பான, மலிவான மற்றும் மதிப்புக் கூட்டு லாஜிஸ்டிக்ஸ் சேவை அளிக்கப்பட உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் பார்க் திட்டத்தைப் பெற அதானி குழுமம் உட்பட 3 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் கடைசியில் ரிலையன்ஸ் வென்றுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
1,424 கோடி ரூபாய் திட்டம்
184.27 ஏக்கரில் 1,424 கோடி ரூபாயில் செலவில் அமைக்கப்படும் இந்தப் பல வகைத் தளவாட பூங்கா திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்னும் பகுதியில் அமைய உள்ளது. இது சென்னை துறைமுகத்திலிருந்து 52 கிமீ தொலைவிலும், எண்ணூர் துறைமுகத்திலிருந்து 80 கிமீ தொலைவிலும், காட்டுப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 87 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
உற்பத்தி துறை
ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்கள் அருகில் மப்பேடு அமைந்துள்ளதால் இத்திட்டம் மூலம் தமிழ்நாட்டு உற்பத்தித் துறைக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பயனளிக்கும் .
முக்கிய வசதிகள்
இந்தப் பூங்காவில் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், சரக்கு டெர்மினல்கள், கஸ்டம் வசதிகள், டிரக் டெர்மினல்கள், வாகன ஓட்டிகளுக்கான தங்குமிடம் மற்றும் போர்டிங் வசதிகள் போன்ற பல வசதிகள் வழங்கப்படும். இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் வெவ்வேறு போக்குவரத்து முறைகளுக்கு மத்தியில் எளிதாகத் தேர்வு செய்ய முடியும்.
10 வருட காத்திருப்பு
பல வகைத் தளவாட பூங்கா திட்டம் உருவாக்கப்பட்டு 10 வருடங்களுக்கும் மேலாகிறது, ஆனால் போக்குவரத்து இணைப்பு போன்ற சிக்கல்களில் தனியார் துறையிடம் இருந்து போதுமான மோசமான வரவேற்பு கிடைத்த காரணத்தால் இத்திட்டம் செயல்படாமல் இருந்தது.
ஒப்பந்தம்
இந்த நிலையில் அக்டோபர் 2021 இல், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தளவாட மேலாண்மை லிமிடெட் மற்றும் சென்னை துறைமுக அறக்கட்டளை ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மப்பேடு தேர்வு
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடுக்கு அருகில் உள்ள மப்பேடு என்னும் இடத்தில் இந்தத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம் மூலம் சென்னை விமான நிலையத்தையும், காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி உட்படச் சென்னையில் இருக்கும் அனைத்து துறைமுகங்களையும் இணைக்கும்.
முக்கிய உற்பத்தி பகுதிகள்
இத்திட்டம் ராணிப்பேட்டை, ஆம்பூர், திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகியவற்றின் இரண்டாம் நிலை மார்கெட் கிளஸ்டர் ஆகச் செயல்படும், இது தோல், கனரக இயந்திர உதிரிப்பாகங்கள், ஆட்டோமொபைல்கள், சிமென்ட், சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் போன்ற தொழில்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
துறைமுகங்கள் - ரயில் இணைப்பு
இத்திட்டத்தின் வெற்றிக்குத் துறைமுகங்கள் வரையிலான ரயில் இணைப்பு முக்கியமானதாக இருக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த லாஜிஸ்டிக்ஸ் பூங்கா மூன்று கட்டங்களாக உருவாக்கப்படும். முதல் கட்டம் அடுத்த 2 வருடத்தில் அதாவது 2025க்குள் முடிக்கப்பட்டுச் சேவைகள் துவங்கப்பட உள்ளது.
சிறப்பு நோக்க வாகனம்
மேலும் இது நாட்டின் முதல் பல வகைத் தளவாட பூங்கா என்பதால், மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து, தேசிய நெடுஞ்சாலைகள் தளவாட மேலாண்மை, ரயில் விகாஸ் நிகாம், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றில் இணைந்து சிறப்பு நோக்க வாகனத்தை (SPV) உருவாக்கியுள்ளன.
சாலை
இத்திட்டத்தின் மொத்த செலவு 1424 கோடி ரூபாய், மொத்த சலுகை காலம் 45 ஆண்டுகள். மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து உருவாக்கிய SPV 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.4 கி.மீ தூரத்திற்கு 4-வழி தேசிய நெடுஞ்சாலை இணைப்பையும், சுமார் 10.5 கி.மீ நீளமுள்ள MMLP தளத்திற்கு 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாதையையும் வழங்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications