இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மத்திய அரசின் வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்படுத்தவும், அதன் மூலம் நன்மை அடையும் வகையில் முழுமையான சேவையை ஓரே இடத்தில் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதன் படி மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முதல் படியாக மஹிந்திரா MSTC Recycling நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
இதன் மூலம் பழைய கார்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஓரே இடத்தில் வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் மொத்த சேவைகளையும் அளிக்க முடியும்.
15 வருட பழைய வாகனம்
15 வருட பழைய வாகனத்தை வைத்துள்ளவர் வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் புதிதாக மஹிந்திரா வாகனத்தை வாங்க திட்டமிட்டு இருந்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் அனைத்து மஹிந்திரா டீலர்ஷிப்-லும் இதற்கான சேவை இந்தக் கூட்டணி மூலம் பெற முடியும்.
வாகன ஸ்கிராப்பேஜ் திட்டம்
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், எரிபொருள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தைக் மார்ச் மாதம் கொண்ட வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 15 வருடங்களுக்கும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து முழுமையாக நீக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
புதிய காருக்கு தள்ளுபடி
மேலும் பழைய வாகனங்களை அழிக்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் புதிய வாகனங்களை வாங்கும் போது தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. அரசின் இந்த முடிவிற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் மஹிந்திரா இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று உள்ளது.
இயங்கும் முறை
மஹிந்திராவின் இப்புதிய சேவையின் கீழ்
1. முதல் வாகனத்தை மதிப்பீடு செய்யப்படும்
2. பின் காருக்கான மதிப்பை புதிய கார் வாங்குவதற்கு அல்லது ஸ்கிராப் செய்வதற்கு ஏற்ப மதிப்பிடப்படும்
3. வாகனத்தைப் பிக்அப் செய்வதில் துவங்கி, ஸ்கிராப் தளத்திற்குக் கொண்டு வருவது முதல், அதைச் சுற்றுச் சூழல்-க்கு பாதிக்காதவாறு CERO ஸ்கிராப்-ஐ தனியாகப் பிரித்தல் என அனைத்தையும் ஓரே இடத்தில் அளிக்கிறது மஹிந்திரா
4. இதன் பின்பு CERO, காருக்கான Certificate of Deposit/Destruction வழங்கும் இதை வைத்து வாடிக்கையாளர் புதிய கார் வாங்கும் போது தள்ளுபடிகளைப் பெற முடியும்.
5. மேலும் கொரோனா பரவி வரும் காரணத்தால் கார் மதிப்பீட்டை கணிக்க வீட்டிற்கே ஆட்களை அனுப்பி இந்தச் சேவைகளை அளிக்கிறது மஹிந்திரா.


Click it and Unblock the Notifications