10 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி: Instamart-இல் இனி கேஸ் சிலிண்டரும் கிடைக்கும்..!!

இந்தியாவில் மளிகை பொருட்கள், காய்கறி, பழம் உள்ளிட்டவற்றை எப்படி குயிக் காமர்ஸ் செயலிகளில் ஆர்டர் செய்து 10 நிமிடங்களில் டெலிவரி பெறுகிறோமோ அதே போல இனி கேஸ் சிலிண்டரையும் டெலிவரி பெற முடியும்.

பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், செப்டோ உள்ளிட்ட குயிக் காமர்ஸ் செயலிகளில் தான் நகரங்களில் பெரும்பாலானவர்கள் பால் உள்ளிட்ட பொருட்களை கூட ஆர்டர் செய்கிறார்கள். இதில் ஆர்டரை போட்டால் போதும் 10 நிமிடங்களில் பொருள் வீட்டுக்கு வந்துவிடும். இதற்காக வண்டி எடுத்து கொண்டு கடைகளுக்கு சென்ற வர வேண்டிய தேவையில்லை. இந்த ஒரு சௌகரியம் தான் குயிக் காமர்ஸ் செயலிகளின் வேகமான வளர்ச்சிக்கு காரணம்.

10 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி: Instamart-இல் இனி கேஸ் சிலிண்டரும் கிடைக்கும்..!!

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி குயிக் காமர்ஸ் செயலியான ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் (Instamart) , அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாம் இன்ஸ்டாமார்ட் மூலம் வீட்டிற்கே டெலிவரி பெற முடியும்.

தற்போதுள்ள நடைமுறையில் வாடிக்கையாளர்கள் 10 கிலோ மற்றும் 5 கிலோ சோட்டா சிலிண்டர்களை புக் செய்து டெலிவரி பெற கேஸ் ஏஜென்சிக்கு செல்ல வேண்டும். ஆனால் இனி இன்ஸ்டாமார்ட்டில் புக் செய்தாலே இவ்வகை சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படும். ஹெச்பி நிறுவனம் அண்மையில் தான் 10 கிலோ எடை கொண்ட ஹெச்பி நவ்யா சிலிண்டரை அறிமுகம் செய்தது ஏற்கனவே 5 கிலோ எடை கொண்ட சோட்டா சிலிண்டர் பயன்பாட்டில் உள்ளது.

Also Read

குறைந்த எடை கொண்ட இவ்வகை சிலிண்டர்களுக்கு நாம் கேஸ் இணைப்பு பெற வேண்டிய தேவையில்லை. நாம் ஆதார் கார்டு கொடுத்து எந்த ஒரு ஏஜென்சியும் வாங்கி கொள்ளலாம், பின்னர் ரீஃபில் செய்யலாம். இதனால் தான் இத்தகைய சிலிண்டர்கள் இன்ஸ்டாமார்ட்டில் கிடைக்கும் என ஹெச்பி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும்போது இன்ஸ்டாமார்ட் செயலி மூலமாகவே LPG சிலிண்டரை ஆர்டர் செய்ய முடியும். இது மிக விரைவான டெலிவரி சேவையை உறுதி செய்கிறது.

இந்த முன்னோடித் திட்டம் முதற்கட்டமாக பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பிற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என ஹெச்பி மற்றும் இன்ஸ்டாமார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Recommended For You

வாடிக்கையாளர்கள் இன்ஸ்டாமார்ட் செயலியில் கேஸ் சிலிண்டர் ஐகானை கிளிக் செய்து 5 கிலோ அல்லது 10 கிலோ எடை கொண்ட HP கேஸ் சிலிண்டர்களை புக் செய்ய வேண்டும். முதன்முறையாக புக் செய்யும் சிலிண்டரின் போது சில தகவல்களை உள்ளிட நேரிடலாம். அதன் பின்னர் ரீஃப்பில்லிங் என புக் செய்தால் புது சிலிண்டர் டெலிவரியின் போது உங்கள் வசம் உள்ள பழைய சிலிண்டரை கொடுக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்கள், பேச்சிலர்கள், வட இந்தியர்கள் ரூம் அல்லது வீடெடுத்து தற்காலிகமாக தங்கி இருப்பவர்களுக்கு இந்த சேவை பெரிய உதவியாக இருக்கும். வழக்கமாக இவர்கள் ஏஜென்சிக்கு சென்று சிலிண்டர் வாங்க வேண்டும் அல்லது ரீஃபில் செய்ய வேண்டும். அதை இன்ஸ்டாமார்ட்டே இனி செய்துவிடும். குறிப்பாக அவசரத் தேவைகளுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக அமையும்.இந்த சேவை மூலம், கேஸ் சிலிண்டர் வாங்குவது இனி மளிகை பொருட்களை போல எளிதாக மாறியுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+