மதுபானம் உடல் நலத்திற்கு கேடு என்று தினமும் ஒரு முறையாவது விளம்பரங்கள் மூலம் மக்கள் பார்த்தாலும், நாட்டின் மதுபான விற்பனை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆன் தி ராக்ஸ் எனப்படும் ஐஸ்கட்டி மீது ஊற்றி அல்லது கிளப் சோடாவுடன் கலந்து சாப்பிட்டால் விஸ்கியின் சுவைக்கு நிகரில்லை. இப்படி மதுபான பிரியர்கள் ஒவ்வொரு மதுப்பானத்திற்கும் தனித்தனி ரெசிபி-ஐ வைத்துள்ளனர். பல ரகங்களில், ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்ப பல விலை உயர்ந்த விஸ்கிகள் உள்ளன.

இப்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிங்கிள் மால்ட் விஸ்கியான அம்ருத் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த பிராண்டை ஜேஎன் ராதாகிருஷ்ண ராவ் ஜக்டேல் தயாரித்தார். இது மதுபான தொழிலில் முதலிடத்தைப் பிடித்தது. அவரது மறைவுக்குப் பின் ராதாகிருஷ்ண ராவ் ஜக்டேலின் மகன் நீலகண்ட ஜக்டேல் அம்ருத் டிஸ்டிலரீஸை மேலும் விரிவுபடுத்தினார்.
இந்த பிராண்டு விரைவிலேயே பன்னாட்டு பிராண்டாக வளர்ச்சியடைந்தது. அதன் உயர் தரம் இந்திய மதுபான தொழிலில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது.
1948 ஆம் ஆண்டில் அம்ருத் டிஸ்டிலரீஸ் மதுபானங்களை தயாரிக்கத் தொடங்கியது.
இந்தியா சுதந்திரம் அடைந்து ஓராண்டுதான் ஆகியிருந்தது. சிறிய முதலீட்டில் இந்தத் தொழில் ஆரம்பிக்கப்பட்டது. அம்ருத் டிஸ்டிலரீஸ் வளர்ச்சிக்கு காரணம் ஜக்டேல் குடும்பத்தாரின் அயராத உழைப்பாகும்.
ஜேஎன் ராதாகிருஷ்ண ராவ் ஜக்டேல் ஜேஎன்ஆர் என அன்போடு அழைக்கப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் அம்ருத் டிஸ்டிலரி லிமிடெட்டை 1948 ஆம் ஆண்டு தொடங்கினார். முதலில் இந்திய தயாரிப்பு அந்நிய மது கர்நாடகம், கேரளாவில் உள்ள ராணுவ கேண்டீன்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்தது. இந்த டிஸ்டிலரியின் முக்கிய ஆலை 1987 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கம்பிபுராவில் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது.
எதிர்பாராதவிதமாக 1976 ஆம் ஆண்டில் ஜேஎன் ராதாகிருஷ்ண ராவ் ஜக்டேல் காலமானார். இதைத் தொடர்ந்து அவரது மகன் ஸ்ரீ நீலகண்ட ராவ் ஜக்டேல் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பதவியேற்றார். அவரது பதவிக்காலத்தில் அம்ருத் டிஸ்டிலரீஸ் பன்னாட்டு பிராண்டாக விரிவடைந்தது. அதன் வளர்ச்சி பிரமாண்டமான அளவில் இருந்தது. மதுபானத் தொழிலில் டாப் பிராண்டாக மாறியது.
இந்தியாவில் பெரும்பாலான மதுபான ஆலைகள் மோலாசஸை வைத்து விஸ்கி தயாரித்தபோது ஜக்டேல் பார்லியுடன் மால்ட்டை கலந்து பிரீமியம் விஸ்கியை தயாரித்தார். 1982இல் இந்த உற்பத்தி தொடங்கியது. பின்னர் அம்ருத் டிஸ்டிலரீஸ் பிரஸ்டிஜ் பிளேண்டடு மால்டு விஸ்கியை தயாரித்து ராணுவ கேண்டீன்களுக்கு சப்ளை செய்தது.
அத்துடன் உள்ளூரில் விளைந்த பார்லியுடன் மொலாசஸை சேர்த்து விஸ்கியை தயாரித்தது. சிங்கிள் மால்ட் விஸ்கியை தயாரிக்க 18 மாதங்கள் பிடித்தன. அந்தக் காலத்தில் இந்தியாவில் யாரும் சிங்கிள் மால்ட் விஸ்கியை விரும்பி சாப்பிடுவதில்லை.
கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட மொலாசஸை வைத்து மேக்கின்டாஷ் பிரீமியம் மதுவை தயாரித்தது. அடுத்த ஓராண்டுக்கு சிங்கிள் பிராண்டு மெச்சூர்டு மால்ட் விஸ்கியை அம்ருத் டிஸ்டிலரீஸ் தயாரித்தது. அம்ருத் டிஸ்டிலரீஸின் மாஸ்டர் பிளண்டர் சுரீந்தர் குமார் இதுபற்றி கூறுகையில், ஸ்காட்லாந்து பேரல்களில் மூன்று ஆண்டுகள் இருப்பது இந்தியாவில் ஓராண்டு இருப்பதற்கு சமமாகும். இதை சாதகமாக வைத்து சூடான தட்பவெப்ப நிலையில் சிறந்த சிங்கிள் மால்ட் விஸ்கியை தயாரிக்க முடிந்தது என்றார்.
நிறுவனத்தின் விருப்பத்துக்கேற்ப புதிய நுணுக்கத்துடன் விஸ்கியை தயாரிப்பதில் கம்பெனி வெற்றி பெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கேண்டீன்கள் மற்றும் பெங்களூர் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சிங்கிள் மால்ட் விஸ்கி தாராளமாகக் கிடைத்தது.
சொகுசையும் மக்கள் கூட்டத்தையும் அம்ரூத் இணைத்ததாக நீலகண்ட ராவ் ஜக்டேல் கருதினார். சொகுசு என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது. விலை அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இந்த விருப்பம் தான் 61 வயதான நீலகண்ட ராவ் ஜக்டேலை காலம்கடந்த சாதனையாளராக நிலை நிறுத்தியது. இங்கிலாந்தின் நியூகேஸ்டிலில் எம்பிஏ படித்துவந்த தனது மகன் ரக்ஷித்தை தமது தயாரிப்புகளை அந்த நாட்டில் விற்பதற்கான வாய்ப்புகளை பார்க்குமாறு வலியுறுத்தினார்.
இது 2001 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் Tatlock & Thomson Ltd நிறுவனத்தை தங்களது பெங்களூரு டிஸ்டிலரியை மேம்படுத்துவதற்கான கன்சல்டன்டாக நியமித்தார். அம்ருத் டிஸ்டிலரீஸ் தங்களது சிங்கிள் மால்ட் விஸ்கியை கண்ணை மூடிக் கொண்டு ஸ்காட்லாந்தில் விற்பனை செய்தது. அங்கு பெரும்பான்மை குடிமகன்கள் அதற்கு சாதகமான வரவேற்பை தந்தனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று இந்த விஸ்கி அம்ருத் சிங்களி மால்ட் விஸ்கி என்ற பெயரோடு அறிமுகமானது.
இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரீமியர் பிராண்டானது. அது மட்டுமல்லாமல் ஸ்காண்டினேவியா, வெஸ்டர்ன் ஐரோப்பாவிலும் பிரபலமடைந்தது. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஆஸ்திரேலியாவில் அம்ருத் சிங்கிள் மால்ட் விஸ்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் 2008இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் உலகளாவிய அளவில் அம்ருத் சிங்கிள் மால்ட் விஸ்கி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
ஸ்ரீ நீலகண்ட ராவ் ஜக்டேலின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் ரக்ஷித் என் ஜக்டேல் கம்பெனியின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். சமகால போட்டிகளுக்கு ஏற்ப ரக்ஷித் சிறப்பான பல மாற்றங்களை செய்தார். மார்க்கெட்டின் தேவைகளை பூர்த்தி செய்தார்.
2022 ஆம் ஆண்டில் ஜக்டேல், அம்ருத் விரைவில் இந்தியாவின் சிங்கிள் மால்ட் பிராண்டாக மாறும் என அறிவித்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதற்கான மூலப் பொருட்களை வாங்கிக் குவித்தார். அவர் செய்த பல்வேறு ஆய்வுகளின்படி இந்தியக் கடலோரப் பகுதிகளில் இருந்து பேஸ் ஸ்பிரிட்களை வாங்கினார்.
அம்ருத் நெய்தல் பீட்டடு இந்தியன் விஸ்கி இந்த மூலப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. இருப்பில் இருந்த 12,000 பாட்டில்களில் 1200ஐ 5,996 டாலர்களுக்கு விற்றார். அம்ருத்தின் மூன்றாவது கிரீடி ஏஞ்சல்ஸ் ரிலீஸான 12 YO- Chairman's Reserve 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இது அம்ருத்தின் 12 ஆண்டுகால வெற்றிகர தொடக்கத்தை குறிப்பிடுவதாக அமைந்தது. இந்த பாட்டிலின் விலை ரூ.70,000.
12 YO- Chairman's Reserve வெறும் 100 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. தங்க மையில் இதன் பெயர் பாட்டிலின் லேபிளில் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த பாட்டில் ஒரு கிளாசிக் பாக்ஸில் இரண்டு க்ளெய்ன் கிரிஸ்டல் கிளாஸ்களுடன் கீரீடி ஏஞ்சல்ஸ் என்று பொறிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது.
இந்திய விஸ்கி மார்க்கெட்டில் அம்ருத் ஒரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு உலகளவில் அதன் சுவை மற்றும் தனித்தன்மைக்காக பெரும் வரவேற்பை பெற்றது. அதன் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி ஆண்டுக்கு விற்றுமுதல் ரூ.1800 கோடியாகவும் சேர்க்கப்பட்ட மதிப்பு ரூ.340 கோடியை தாண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications