இன்றளவும் இந்திய மக்கள் விரும்பி பயன்படுத்தும் போக்குவரத்து முறையாக ரயில்வே இருந்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் டிக்கெட் கட்டணம் என்று சொல்லலாம். பிற போக்குவரத்தைக் காட்டிலும் ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் ஏழை எளியவருக்கு வசதியான ஒன்றாக ரயில் பயணம் அமைந்துவிட்டது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இன்னும் 8 நாட்களில் வரவிருக்கிறது. ஜூலை 17-ஆம் தேதி ஹரியானாவில் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. கிரீன் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் மிஷன் மற்றும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ரயில் கொண்டுவரப்படுகிறது. ஹரியானாவில் ஜூலை 17ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து ரயிலை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹைட்ரஜன் ரயிலின் டிசைன் குறித்து சொல்லியே ஆக வேண்டும். இதை டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட் ஆர்கனைசேஷன் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ரயிலை செய்வதற்கான பெட்டிகள் இன்டெக்ரால் கோச் ஃபேக்டரி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை இந்த ரயிலை பயன்படுத்தும் போது 2600-க்கும் மேற்பட்ட பயணிகள் வசதியாக எறிச் செல்லாம். இதில் 1200 கிலோ வாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் புயல் ப்ரொபைல் சிஸ்டம் உள்ளது. இதனால் எரிபொருள் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கும்.
அதேபோல இந்த ஹைட்ரஜன் ரயிலின் உள்புறம் மற்றும் வெளிப்புறமாகிய இரண்டிலும் பெரிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஹைட்ரஜன் சேமிக்கப்பட்டு அந்த ஹைட்ரஜன் ஏரி பொருள் வெளியில் அனுப்பப்படும் போது காற்றிலுள்ள ஆக்ஸிஜடன் ரியாக்ட் ஆகி மின்சாரம், தண்ணீர் மற்றும் வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த மின்சாரம் அதன் பின்னர் ரயிலை இயக்கும் சக்கரங்கள் மற்றும் மோட்டார்க்கு அனுப்பப்படுகிறது.
பிற வாகனங்களுக்கு எல்லாம் எரிபொருள் நிரப்பிய பின்னர் கார்பன் டை ஆக்சைடு வெளியாகும். ஆனால் இந்த ஹைட்ரஜன் ரயில் மூலம் வெறும் வெப்பம் மற்றும் தண்ணீர் தான் வெளியாகும். அதாவது கரும்புகை எதுவுமே வராது. இதனாலோ என்னவோ ஹைட்ரஜன் எரிபொருளை எதிர்கால எரிபொருள் என்றும் சிலர் அழைக்கின்றனர். இந்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது கார்பன் டை ஆக்சைடு அல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் வெப்பம் வெளியாகும் ஒரு எரிபொருளாக ஹைட்ரஜன் இருப்பதால் இனி வரும் காலங்களில் இந்த ஹைட்ரஜன் ரயில் சேவை இன்னும் அதிகரிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது.
முதல் முறையாக ஜிந்த் மட்டும் சோனிபட் இடையே உள்ள 89 கிலோமீட்டர் பாதையில் இயக்கப்பட இருக்கிறது. இதில் நான்கு முதல் ஐந்து ரயில் நிலையங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வழக்கம்போல இந்த ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.5 முதல் 25 ரூபாய் வரை இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் சோதனை முடிந்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ரயில் இயக்கப்பட விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ஆம் தேதி அன்று மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications
