இந்தியாவில் "வந்தே மெட்ரோ".. விரைவில் அனைத்து பெருநகரங்களிலும்! தொடங்கி வைத்தார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அன்று, புஜ் மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் "வந்தே மெட்ரோ" சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் அதிகாரப்பூர்வமாக "நமோ பாரத் ரேபிட் ரெயில்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் திங்கள்கிழமை அன்றே தனது குஜராத் பயணத்தின் போது பல வந்தே பாரத் ரயில்களையும் திறந்து வைத்தார்.

வந்தே மெட்ரோ நகர்ப்புற பகுதிகளைப் புறநகர் நகரங்களுடன் இணைக்கும் வகையில் பயணிக்கும். "மற்ற மெட்ரோக்கள் குறுகிய தூரங்களையே கடக்கும் நிலையில், வந்தே மெட்ரோ ரயில்கள் நகரத்தின் மையப்பகுதியிலிருந்து புறநகர் நகரங்களுக்கும் செல்லும்" என்று ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.

 இந்தியாவில்


வந்தே மெட்ரோ என்றால் என்ன?: வந்தே மெட்ரோ விரைவு ரயில் என்பது ஒரு குறுகிய தூர சேவையாகும், இது நகரங்களுக்கு இடையேயான ரயில் நெட்வொர்க்கில் 100-250 கிமீ அதாவது 62-155 மைல் தொலைவில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது. நமோ பாரத் ரேபிட் ரயில் ஏப்ரல் 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் இந்திய அரசின் "மேக் இன் இந்தியா" முயற்சியின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் "நமோ பாரத் விரைவு ரயில்" இயக்கப்படுவதனால் ஏற்படும் நன்மைகள்: அகமதாபாத்-புஜ் வந்தே மெட்ரோ சேவை 9 நிலையங்களில் நின்று 360 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 45 நிமிடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கும். இதன் மூலம் விரைவாக பல்வேறு இடங்களுக்குச் செல்ல முடியும். இது புஜில் இருந்து காலை 5.05 மணிக்கு புறப்பட்டு 10.50 மணிக்கு அகமதாபாத் சந்திப்பை சென்றடையும்.

இந்த ரயிலில் 12 குளிரூட்டப்பட்ட பெட்டிகள், தானியங்கி கதவுகள், எல்இடி விளக்குகள், வெற்றிட வெளியேற்றத்துடன் கூடிய கழிப்பறைகள், ரூட் மேப் இன்டிகேட்டர்கள், பனோரமிக் ஜன்னல்கள், சிசிடிவி, போன் சார்ஜிங் வசதிகள் மற்றும் அலாரம் மூலம் தானியங்கி புகை அல்லது தீயைக் கண்டறியும் வசதி உள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல் இந்த ரயில் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. முதல் பயணம் அகமதாபாத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான கட்டணம் 455 ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

நமோ பாரத் ரேபிட் ரெயில், அவசரகால விளக்குகளுடன் ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கும், தீயைக் கண்டறிவதற்கும், ஏரோசால் அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டிருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இந்தியாவில்


150 கிமீ சுற்றளவில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சுமார் 3 முதல் 4 மணி நேரம் வசதியான பயணத்தை வழங்குகிறது.

இதற்கிடையில், கோலாப்பூர்-புனே, புனே-ஹூப்பள்ளி, நாக்பூர்-செகந்திராபாத், ஆக்ரா கான்ட் முதல் பனாரஸ், ​​மற்றும் துர்க் முதல் விசாகப்பட்டினம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதல் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் வாரணாசி மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+