இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து சேவை மிகவும் முக்கியம் என்பதை தாண்டி அடிப்படையாக உள்ளது. இந்திய அளவிலும், மாநில அளவிலும், நகரங்கள் மத்தியில் உள்ள முக்கிய வர்த்தக பகுதிகளை பல்வேறு போக்குவரத்தின் தளத்தின் வாயிலாக இணைப்பதன் வாயிலாக வர்த்தகம், பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும்.
இந்த வகையில் மத்திய மாநில அரசுகள் தற்போது சாலை போக்குவரத்தையும், ரயில் போக்குவரத்தையும், விமான போக்குவரத்தையும் மேம்படுத்தவது மட்டும் அல்லாமல் வேகப்படுத்தும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. இதன் நீட்சியாக நீர் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக கேரளாவில் இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் மெட்ரோ திறக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையான கொச்சி வாட்டர் மெட்ரோ-வை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். கொச்சி நகரத்துடன் தடையற்ற இணைப்புக்காக பேட்டரி மூலம் இயக்கப்படும் எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் மூலம் கொச்சியைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கிறது இந்த வாட்டர் மெட்ரோ.
கொச்சியில் உருவாக்கப்பட்ட இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தை சுமார் 1,136.83 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் வை மாநிலத்தின் "கனவு திட்டம்" என்று கூறினார். மேலும் அவர் தென் மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு உற்சாகம் நிறைந்த காலக்கட்டம் காத்திருக்கின்றன எனவும் டிவீட்டில் தெரிவித்தார்.

உலக தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கு கேரள அரசும், ஜெர்மனி நாட்டின் முதலீட்டு ஏஜென்சியான KFW இணைந்து சுமார் 1136.83 கோடி ரூபாய் முதலீடு செய்து 78 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகளையும், 38 முணையங்களையும் அமைத்துள்ளது. கேரள அரசின் இந்த கனவு திட்டத்தின் மூலம் கொச்சியில் 10 தீவுகள் இணைக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 24 மற்றும் 25, 2023 தேதிகளில் செல்ல உள்ளார். இந்த பயணத்தில் கேரளவிான கனவு திட்டமான வாட்டர் மெட்ரோ திறப்பது துவக்கி வைப்பது மட்டும் அல்லாமல் ஏப்ரல் 25 அன்று, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
அமெரிக்காவில் விமான போக்குவரத்தும், சாலை போக்குவரத்தும் சிறப்பாக இருந்தாலும் அந்நாட்டில் சுமார் 500 முனையங்கள் மூலம் சுமார் 37 மாநிலங்களை கப்பல் போக்குவரத்து சேவை இணைக்கிறது. கப்பல் போக்குவரத்தில் சுமார் 700 கப்பல்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக இத்துறையில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications