இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அக்டோபர் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க அதிகளவிலான டாலர்களை விற்பனை செய்தது. ஆனால் இதேவேளையில் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாகச் சரிந்துள்ளது.
இதைச் சரி செய்ய முக்கியமான நடவடிக்கைகளை நவம்பர் 3ஆம் தேதி நடக்க இருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா நயன்தாரா
ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் பல வாரங்களாகத் தொடர்ந்து டாலருக்கு எதிராக 80 ரூபாய்க்கு அதிகமாகவே உள்ளது. இதனால் இந்தியாவின் இறக்குமதிக்கு அதிகத் தொகை செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ரூபாய் மதிப்பின் சரிவு
இந்த நிலையில் ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது.
அன்னிய செலாவணி கையிருப்பு
அன்னியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 21 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3.85 பில்லியன் டாலர் குறைந்து 524.52 பில்லியன் டாலராக உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஜூலை 2020-க்கு பின்பு மோசமான நிலையை எட்டியுள்ளது இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு.
117.93 பில்லியன் டாலர் சரிவு
இதேபோல் ஸ்பாட் அன்னிய செலாவணி கையிருப்பு அளவு மார்ச் இறுதியில் 607 பில்லியன் டாலர் அளவில் இருந்து பெரிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டுச் செப்டம்பர் 3 இல் அதிகபட்ச அளவான 642.45 பில்லியன் டாலரில் இருந்து தற்போது 117.93 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
அன்னிய நாணய சொத்துக்கள்
ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்ட வாராந்திர அறிக்கையின் படி அன்னிய செலாவணி கையிருப்பு சரிவுக்கு, அன்னிய நாணய சொத்துக்கள் (FCA) வீழ்ச்சி முக்கியக் காரணமாக உள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பில் FCA பெரு பகுதி வகிக்கிறது. அக்டோபர் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் $3.59 பில்லியன் குறைந்து $465.08 பில்லியனாக உள்ளது. தங்கம் கையிருப்பு $247 மில்லியன் குறைந்து $37.21 பில்லியனாக உள்ளது.
11 வாரங்கள் சரிவு
இதன் மூலம் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 12 வாரங்களில் 11 வாரங்கள் குறைந்து உள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் தங்க இருப்பின் மதிப்பு அதிகரித்த காரணத்தால் ஒரு வாரம் மட்டும் உயர்வுடன் காணப்பட்டது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான அன்னிய செலாவணியைச் செலவு செய்துள்ளது. ஆனாலும் ரூபாய் மதிப்பு இந்த வருடம் 12 சதவீதம் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவை
அக்டோபர் 20ஆம் தேதி அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தால் சரிவடைந்த சீன யுவான், அதிகரித்த கச்சா எண்ணெய் விலை, 10 வருட உயர்வில் அமெரிக்க அரசு பத்திர லாப உயர்வுகள் ஆகியவற்றின் மூலம் ரூபாய் மதிப்பு 82.47 என்ற வரலாற்று சரிவை பதிவு செய்தது.
நாணய கொள்கைக் குழு கூட்டம்
இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கவே ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அதன் வட்டி விகித நிர்ணயக் குழுவான நாணய கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூடுதல் கூட்டம் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி
ஆர்பிஐ-யின் நாணய கொள்கை கூட்டம் கடைசியாகச் செப்டம்பர் 28 - 30, 2022 அன்று கூடியது, இதைத் தொடர்ந்து ஆர்பிஐ அட்டவணைப் படி டிசம்பர் 5 - 7, 2022 அன்று சந்திக்கத் திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நவம்பர் 3 ஆம் தேதி அவசர கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications