நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்து வரும் போதிலும் பார்மல் ஜாப்ஸ் எனப்படும் முறைசார் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் காரணமாக கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் இருந்தபோதும், முறைசார் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலை நிலவி வரும் நிலையிலும், வேலை வாய்ப்புகள் என்பது அதிகரித்து வருவதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
பே ரோல் தரவு
இது குறித்து புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் ஊதியத் தரவு (pay roll) குறித்தான அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் கிட்டதட்ட 12.24 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 11.77 லட்சம் ஆக இருந்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
EPFO தரவு
மேலும் இந்த அமைச்சகம் கடந்த 2017 செப்டம்பர் முதல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம், இஎஸ்ஐ, மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்தான தரவுகளை வெளியிட்டு வருகின்றது.
இதே EPFO மூலம் கடந்த மார்ச் 2021ல் 11.21 லட்சம் புதிய பதிவுகள் உள்ளதாகவும், இதே பிப்ரவரி 2021ல் 11.28 லட்சம் ஊழியர்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஜனவரி மாதத்தில் இது 13.36 லட்சம் புதிய பதிவுகளை கண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தேசிய ஓய்வூதிய திட்டம்
இதே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் புதிய பதிவு கடந்த மார்ச் மாதத்தில் 25.45 லட்சமாக இருந்தது.
கொரோனாவுக்கு மத்தியிலும் அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில், ஒரளவு வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் இந்த தரவுகள் சாதகமான வளர்ச்சியினை கண்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
வேலையின்மையும் அதிகரிப்பு
எனினும் மற்றொரு தரவில் சமீபத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக வேலையிழப்புகள் அதிகரித்து வருவதாக பார்த்தோம். இது குறித்த CMIE தரவுகளும் மிக மோசமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்தது. எனினும் இந்த வேலையிழப்புகள் வேலையின்மை என்பது முறைசாரா துறையில் அதிகளவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் முறைசார் துறையில் வேலையிழப்புகள் என்பது சற்று அதிகரித்து வந்தாலும், முறைசாரா துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துள்ளது என்பது தவிர்க்க முடியா உண்மையே.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications