நாட்டில் கொரோனாவின் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவின் எரிபொருள் தேவையானது ஆகஸ்ட் மாதத்தில் 16% வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அதன் மிகப்பெரிய மாத சரிவினைக் கண்டுள்ளது.
இந்தியாவில் 43 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 73,890 ஆக அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் சர்வதேச அளவில் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. அந்தளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தான் எரிபொருளின் தேவையானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாதத்தில் 16% வீழ்ச்சி கண்டு, 14.39 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதே முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 7.5% வீழ்ச்சி கண்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் நிச்சயமற்ற நிலையே நிலவி வருகின்றது. இது தொடர்ந்து எரிபொருள் தேவை மீட்பு வேகத்தினை குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்துகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இது அதிகப்படியான சரிவினைக் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட ஒரு அளவுருவாக டீசல் நுகர்வு உள்ளது. அதோடு இந்தியாவில் ஒட்டுமொத்த சுத்திகரிப்பு மற்றும் விற்பனையில் 40% பங்கு வகிக்கிறது. இது கடந்த ஜூலை மாதத்தில் 5.51 மில்லியன் டன்னிலிருந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 12% குறைந்து 4.85 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதே ஆண்டு அடிப்படையில் டீசலின் தேவையானது 20.8% வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக மாதாந்திர டீசல் விற்பனை குறைவது என்பது பொருளாதார வளர்ச்சியினை சுட்டிக் காட்டுகிறது.
இதே பெட்ரோல் விற்பனையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.4% குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.38 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது.
எனினும் இது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகை நாட்கள் அதிகம் இருப்பதால் எரிபொருள் தேவையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோங்க.. எரிபொருள் விலையானது கட்டுக்குள் இருந்தால் சரியே.
More From GoodReturns

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications