டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் தேவையானது வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவையானது மீண்டும் பழைய படிக்கு திரும்ப, அடுத்த 6 முதல் 9 மாதங்கள் ஆகலாம் என்று இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனத்தின் இயக்குனர் எஸ் கே குப்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விற்பனையானது 45.8% சரிந்துள்ளது. எனினும் மே மாதத்தில் இருந்து சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டதால், தற்போது எரிபொருள் தேவையானது சற்று மீளத் தொடங்கியுள்ளது.

எனினும் தற்போது மீண்டும் தினசரி தொற்று விகிதமானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் பல இடங்களில் பூட்டுதலை விதிக்கப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் அழைப்பு குறித்து பேசிய குப்தா, முதல் காலாண்டு வருவாய் பற்றியும் பேசியுள்ளார். மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தேவை மீட்பானது எப்போது இருக்கும் என்பது குறித்து கணிப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் இயல்பு நிலை திரும்ப 6 - 9 மாதங்கள் ஆகலாம் என்றும் குப்தா தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில் சற்றே தேவை மீண்டு வந்த நிலையில், ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் மீண்டும் குறைந்துவிட்டது.
இந்தியாவில் ஒட்டுமொத்த பெட்ரோலிய பொருட்கள் தேவையில், ஐந்தில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது டீசல். இது முந்தைய மாதத்தினை விட ஜூலை மாதத்தில் 13% குறைந்து 4.85 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய மாதத்தினை விட 21% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெட் ரோல் விற்பனையானது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்தில் 1% குறைந்து 2.03 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதே முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 11.5% குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு விமான எரிபொருள் விற்பனையும் முந்தைய மாதத்தினை விட ஜூலை மாதத்தில் 4% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த நெருக்கடியான காலத்திலும் தொடர்ந்து அதிகரித்துள்ள ஒரே எரிபொரூள் சமையல் எரிவாயு தான். இது ஜூன் மாதத்தினை விட 10% அதிகரித்து 2.27 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 3.5%அதிகரித்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications