அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினைக்குள் சிக்கிய முகேஷ் அம்பானி.. ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ..!!

இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதி தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது, கச்சா எண்ணெய் வளம் அதிகம் இல்லாத ஒரு நாடாக இருந்துக்கொண்டு, நாட்டு மக்களின் தேவையையே வெளிநாட்டு இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படும் சூழ்நிலையில் இந்தியாவின் சில நிறுவனங்கள் அதிகப்படியான எரிபொருளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணம் காட்டி 25 சதவீத வரி விதித்தது, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் விதித்த தடைகள் ஆகியவை தற்போது இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதி மீது தனிப்பட்ட கவனம் திரும்பியுள்ளது.

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினைக்குள் சிக்கிய முகேஷ் அம்பானி.. ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ..!!

இந்த நிலையில், இந்தியாவின் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவை ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் தனியார் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினாலும், அதை ஏற்றுமதி செய்துவது என்னவோ தனியார் நிறுவனங்கள் தான் அதிகம். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்களின் பங்கு 35 சதவீதம். ஆனால் தனியார் நிறுவனங்களான நயாரா மற்றும் ரிலையன்ஸ் 44 சதவீத பங்கீட்டை வகிக்கிறது.

இதுவே ஏற்றுமதியை கணக்கிட்டால் சுமார் 76 சதவீத பங்கீட்டை நயாரா மற்றும் ரிலையன்ஸ் மட்டுமே கொண்டுள்ளது.

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினைக்குள் சிக்கிய முகேஷ் அம்பானி.. ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ..!!

ரஷ்ய எண்ணெய் கொள்முதல்:
2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் மிகப்பெரிய அளவில் வாங்கியது. ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்கி, அதை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளாக உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நயாரா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளன. ஆனால், தற்போது ஐரோப்பாவின் நெருக்கடி மற்றும் டிரம்ப்-ன் வரி விதிப்பு மூலம் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

6 மாத தரவுகள்:
2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவில் இருந்து 29.251 மில்லியன் டன் மதிப்பிலான பலதரப்பட்ட பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் பெட்ரோலியம் துறையின் பெட்ரோலியம் பிளானிங் மற்றும் அனலிசிஸ் செல் தெரிவித்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் தனியார் கச்சா எண்ணெய் நிறுவனங்களான நயாரா மற்றும் ரிலையன்ஸ் 22.35 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெய்-ஐ ஏற்றுமதி செய்துள்ளதாக ரெயூட்டர்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இது நாட்டின் மொத்த பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 76 சதவீத பங்கீடாகும்.

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினைக்குள் சிக்கிய முகேஷ் அம்பானி.. ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ..!!

நயாரா எனர்ஜி:
ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் கட்டுப்பாட்டில் இந்தியாவில் இயங்கி வரும் ஒரு கச்சா எண்ணெய் மற்றும் ஏரிபொருள் நிறுவனம் தான் இந்த நயாரா எனர்ஜி. 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 3 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்துள்ளது, இது இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 30% ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய தடைகள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை கடுமையாக பாதித்துள்ளன. இதனால் நயாரா எனர்ஜி தனது 4,00,000 பேரல் உற்பத்தி திறன் கொண்ட Vadinar சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினைக்குள் சிக்கிய முகேஷ் அம்பானி.. ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ..!!
Photo Credit:

நயாராவின் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்குபவர்களில் சுவிஸ் நிறுவனமான விட்டோல் முதல் இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறது. மேலும் ஆரம்கோ டிரேடிங், ஷெல் மற்றும் பிபி ஆகியவையும் தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

இருப்பினும், இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 70% இந்தியாவில் உள்ள 6,600-க்கும் மேற்பட்ட ரீடைல் நிலையத்தில் விற்பனை செய்கிறது, 30 சதவீதத்தை மட்டுமே ஏற்றுமதி செய்கிறது.

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினைக்குள் சிக்கிய முகேஷ் அம்பானி.. ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ..!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை குஜராத் ஜாம்நகரில் இயக்கி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுமதியாளராக உள்ளது.

இந்நிறுவனம் 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், ரிலையன்ஸ் 19.65 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் ஐரோப்பா சந்தைக்கு மட்டும் சுமார் 28% எரிபொருளை ஏற்றுமதி செய்துள்ளது. இதை தொடர்ந்து பிபி, எக்ஸான் மொபைல், கிளென்கோர், விட்டோல் மற்றும் டிராஃபிகுரா போன்ற நிறுவனங்கள் ரிலையன்ஸின் முக்கிய வாடிக்கையாளராக உள்ளன.

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினைக்குள் சிக்கிய முகேஷ் அம்பானி.. ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ..!!

லாபம் மட்டுமே காரணம்:
இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வாங்கப்படும் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் பெருமளவு உள்நாட்டு தேவைக்காக விற்கப்படுகிறது, ஆனால் நயாரா மற்றும் ரிலையன்ஸ் அதிக லாபத்திற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினைக்குள் சிக்கிய முகேஷ் அம்பானி.. ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ..!!

ஸ்காட் பெசன்ட் பற்றவைத்த தீ:
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் சிஎன்பிசி சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்தியா ரஷ்யா எண்ணெய் வைத்து லாபம் பார்த்து வருகிறது. தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய்-ஐ வாங்கி அதனை எரிபொருளாக சுத்திகரிப்பு செய்து தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்யை ஐரோப்பாவிலும், பிற சந்தைகளிலும் விற்று வருகிறது.

இது வெறும் லாபம் பார்க்கும் செயல், ரீசெல்லிங் முறையிலான வர்த்தகம், இந்தியாவின் சில பணக்கார குடும்பங்கள் இத்தகைய வர்த்தகம் மூலம் சுமார் 16 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது என ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+