இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமம் சந்தை கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஜனவரி 24 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
Recommended Video
இந்த அறிக்கை இந்திய வர்த்தகச் சந்தையை மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது. அதானி குழுமம் மீது ஏற்கனவே creditsights என்னும் நிறுவனம் அதிகப்படியான கடனில் இருப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் நிதி மோசடிகள், கணக்கியல் மோசடிகளைக் கண்டுபிடிப்பதில் முன்னோடியான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியது. இதற்கு 413 பக்க விளக்க அறிக்கையை அளித்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் காரசாரமான பதிலை அளித்துள்ளது.
ஜனவரி 24 அறிக்கை
ஜனவரி 24 உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரால் நடத்தப்படும், இந்தியாவின் 2வது பெரிய நிறுவனமான அதானி குழுமத்தில் நடந்துள்ள மோசடிகள் நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் பல விஷயங்களைத் தொகுத்து அறிக்கையாக நாங்கள் வெளியிட்டோம்.
மேடாஃப்ஸ் ஆஃப் மன்ஹாட்டன்
இந்த அறிக்கைக்கு, சில மணி நேரங்களுக்கு முன்பு அதானி குழுமம் சுமார் '413 பக்க பதில்' ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதில் நாங்கள் (ஹிண்டன்பர்க் ரிசர்ச் ) "மேடாஃப்ஸ் ஆஃப் மன்ஹாட்டன்" (Madoffs of Manhattan) என்ற பரபரப்பான கூற்றுடன் வெளியிட்டு உள்ளது என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது இணையத் தளத்தில் பதில் அளித்துள்ளது.
சட்டங்கள்
அதானி குழுமம் செக்யூரிட்டீஸ் மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளதாகக் கூறியுள்ளது. அதானி குழுமம் அத்தகைய சட்டங்களைக் கண்டறியத் தவறிய போதிலும், இதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கும் மற்றொரு கடுமையான குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளது.
தேசியவாத கதை
அதானி குழுமம் இந்தப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப முயன்று தேசியவாத கதையைப் பேச துவங்கியுள்ளது. எங்கள் அறிக்கை "இந்தியாவின் மீது கணக்கிடப்பட்ட தாக்குதல்" என்று கூறுகிறது அதானி குழுமம்.
இந்தியாவின் வெற்றி
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் அதானி குழுமம் மற்றும் அதன் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் பதிவான வளர்ச்சியைத் தேசியவாத கதை உடன் இந்தியாவின் வெற்றியுடன் இணைக்க முயன்றுள்ளது.
இந்தியா
இதற்கு நாங்கள் உடன்படவில்லை. தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயக நாடு மற்றும் அற்புதமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்பதை நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவின் எதிர்காலம்
இதேவேளையில் அதானி குழுமத்தால், இந்தியாவின் எதிர்காலம் தடுக்கப்படுகிறது தேசத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் அதே வேளையில், இந்தியக் கொடியில் தன்னைப் போர்த்திக் கொண்டு உள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது இணையத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோசடி
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரால் மோசடி செய்யப்பட்டாலும், மோசடி என்பது மோசடி தான் என்று நாங்கள் நம்புகிறோம் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
30 பக்கம் மட்டுமே பதில்
இதேபோல் அதானி குழுமத்தின் 413 பக்க அறிக்கையில் 30 பக்கம் மட்டுமே எங்களுடைய 88 கேள்விக்கான பதிலாகும். அதிலும் முக்கியமாக 62 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளது. எஞ்சியுள்ள 330 பக்கம் நீதிமன்ற ஆதாரங்கள், நிதி முடிவுகள் போன்றவை தான். இது தற்போதைய நிலையில் தேவையற்ற ஒன்று என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications