இந்திய GCC நிறுவனத்தில் புது பிரச்சனை.. ஐடி ஊழியர்களே அதிக சம்பளம் வாங்க இது தான் சரியான சான்ஸ்!

இந்திய டெக் துறையிலும், கார்ப்ரேட் துறையிலும் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களின் ஜிசிசி-க்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்க துவங்கியுள்ளது. அதிக சம்பளத்துடன், உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு என்றால் ஜிசிசி நிறுவனங்கள் தான் என்ற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான திறன்வாய்ந்த ஊழியர்களை நம்பி இந்தியாவில் கடையை விரித்த பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்களின் ஜிசிசி அலுவலகங்கள் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை திறன்வாய்ந்த ஊழியர்களின் தட்டுப்பாடு தான்.

 இந்திய GCC நிறுவனத்தில் புது பிரச்சனை.. ஐடி ஊழியர்களே அதிக சம்பளம் வாங்க இது தான் சரியான சான்ஸ்!

இந்தியாவில் ஜிசிசி அலுவலகம் திறப்பது மூலம் அதிகளவில் பலன் கிடைக்க துவங்கியுள்ளதால், பெரும்பாலான நிறுவனங்கள் கடந்த 2-3 வருடத்தில் தனது பணிகளையும், சேவைகளையும் விரிவாக்கம் செய்துள்ளது. ஆனால் இந்த விரிவாக்கத்திற்கு பின்பு ஜிசிசி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை, நிறுவனங்களுக்கு தேவையான திறன் கொண்ட ஊழியர்கள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதாக PWC அமைப்பு சமீபத்தில் செய்தி ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Also Read

சுமார் 8 துறையில் 200க்கும் அதிகமான மூத்த ஆதிகாரிகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் சுமார் 11 சதவீத நிறுவனங்கள் தங்களுக்கு சேவையான திறன் கொண்ட ஊழியர்கள் இல்லை எனவும், இதன் தங்களுடைய வர்த்தகம் அதிகமாக பாதிக்கப்பட்டு கூடுதல் காலமும், செலவுகளும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த திறன் பற்றாக்குறை காரணமாக 10 ஜிசிசி நிறுவனங்களில் சுமார் 6 நிறுவனங்கள் தங்களுடைய ப்ராடெக் லான்ச், ப்ராஜெட் டைம்லைன், சந்தைக்கு செல்லும் திட்டம் என அனைத்தும் காலதாமதமாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Recommended For You

இதில் முக்கியமாக ஆய்வில் பங்குபெற்ற நிறுவனத்தில் சுமார் 54 சதவீதம் பேர் ஏஐ மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் பிரிவில் திறன் பற்றாக்குறை காரணமாக அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த திறன் பற்றாக்குறை காரணமாக சிறிய அளவில் திறன்கொண்ட ஊழியர்களுக்கும் அதிகப்படியான சம்பளத்தை கொடுக்க வேண்டிய கட்டாயமும், இந்த பற்றாக்குறை காரணமாக ப்ராஜெக்ட் காலதாமதமாகவும் செலவுகள் அதிகரித்து வருகிறது என புலம்பி வருகிறது.

சுமார் 56 சதவீத ஊழியர்கள் முக்கிய துறையில் திறன்வாய்ந்த ஊழியர்கள் தேவை என்பதற்காக வெளி நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், மூலம் அதிக சம்பளத்திற்கு ஊழியர்களை பணியில் எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. 49 சதவீத ஊழியர்கள் அதிகப்படியான ஊழியர்கள் வெளியேற்றத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இப்படி திறன்வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் டெக் துறை மட்டும் அல்லாமல் அனைத்து துறையிலும் தற்போது சந்தைக்கு தேவையான திறனை வளர்த்துக்கொண்டு அதிக சம்பளத்தில் வேலையை எளிதாக பெற முடியும்.

இதற்கு ஜிசிசி முக்கிய இடமாக உள்ளது, இதேபோல் ஜிசிசி நிறுவனங்கள் என்பது டிசிஎஸ், இன்போசிஸ் போன்று மாஸ் வேலைவாய்ப்பு உருவாக்கும் நிறுவனம் இல்லை. ஆனால் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் போதுமான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+