40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவு.. FY21ல் ஜிடிபி 7.3% சரிவு..!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், கடந்த ஆண்டில் நாடு தழுவிய முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சியான 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவினை கண்டுள்ளது.

இது குறித்து மத்திய புள்ளியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் இந்தியாவில பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.3% ஆக வீழ்ச்சியினை கண்டுள்ளது.

இதே கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் 1.6% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

மோசமான சரிவு

மோசமான சரிவு

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 24.38% ஆக வீழ்ச்சிக் கண்டது. இது நாடு தழுவிய லாக்டவுனுக்கு மத்தியில் பெரும் வீழ்ச்சியினை சந்தித்தன. இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டிலும் 7.5% சரிவினைக் கண்டன. இதே மூன்றாவது காலாண்டில்ம் பெரியளவில் வளர்ச்சி இல்லாவிட்டாலும் 0.5% ஏற்றத்தினைகக் கண்டது. இதற்கிடையில் நான் காவது காலாண்டில் 1.6% வளர்ச்சியினைக் கண்டுள்ளது.

இரண்டாம் பாதியில் சற்றே வளர்ச்சி

இரண்டாம் பாதியில் சற்றே வளர்ச்சி

எப்படியிருப்பினும் கடந்த 2019 - 20ம் நிதியாண்டின் ஜிடிபி விகிதம் 4% ஆக வளர்ச்சி கண்டிருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் நாடு தழுவிய முழு லாக்டவுன் காரணமாக ஜிடிபியும் வீழ்ச்சியினை கண்டுள்ளது. குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் மிக மோசமான சரிவினைக் கண்டது. இதே ஆண்டின் பிற்பாதியில் பெரியளவிலான வளர்ச்சி இல்லாவிட்டாலும், சரிவினைக் காணவில்லை என்பதே நல்ல விஷயமாக பார்க்கப்பட்டது.

லாக்டவுனால் பாதிப்பு

லாக்டவுனால் பாதிப்பு

தற்போது நாட்டின் சில பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், தொழில் துறைகளில் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. எனினும் கடந்த ஆண்டில் முழுமையாக முடங்கிய நிலையில், சப்ளை சங்கிலி முற்றிலும் பாதிப்படைந்தது. நுகர்வும் குறைந்தது. மக்கள் கைகளில் பணப்புழக்கம் குறைந்ததையடுத்து, தேவையும் முடங்கியது.

சரிவுக்கு இதுவும் ஒரு காரணம்

சரிவுக்கு இதுவும் ஒரு காரணம்

அதோடு பல லட்சம் பேர் அந்த சமயத்தில் தங்களது வேலைகளை இழந்து, அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நிலை இருந்து வந்தது. அதோடு கடந்த ஆண்டில் கொரோனா தடுப்பூசிகளும் இல்லாத நிலையில், அது மக்கள் மத்தியில் நம்பிக்கையை குறைத்தது. இதனால் முதலீடுகளும் குறைந்தன. அன்னிய முதலீடுகள் வரத்தும் ஆரம்பத்தில் குறைந்தது. இப்படியொரு மோசமான நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தான் ஜிடிபி சரிவினைக் கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+