இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் 7.4% ஆக வளர்ச்சி காணலாம் என ஃபிக்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வறிக்கையானது குறைந்தபட்சம் 6% ஆகவும், அதிகபட்சமாக 7.8% ஆகவும் வளர்ச்சி விகிதம் இருக்கலாம் என கணித்துள்ளது.
இது தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் விலைவாசியானது எகிறி வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச பொருளாதாரம் மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது.
துறை வாரியாக வளர்ச்சி
நடப்பு நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான சராசரி வளர்ச்சி விகிதம் 3.3 சதவீதாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. தொழில் மற்றும் சேவை முறையே 5.9 சதவீதம் மற்றும் 8.5 சதவீதமாக வளர்ச்சி காணலாமென மதிப்பிடப்பட்டுள்ளது.
வட்டி விகித அதிகரிப்பு எப்போது?
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வட்டி விகித உயர்வானது இருக்கலாம். இந்த வட்டி விகித அதிகரிப்பானது 50 - 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஏப்ரல் மாத ஆய்வுக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி ஆதரவளிக்கும் விதமாக வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சரியவும் வாய்ப்பிருக்கு
எனினும் வளர்ச்சி விகிதங்கள் சரிவதற்கான காரணிகளும் அதிகரித்து வருவதாகவும் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. கொரோனாவின் தாக்கம் இன்னும் சில நாடுகளில் இருந்து கொண்டுள்ள நிலையில், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையும் முடிவுக்கு வராமல் சவாலான ஒரு விஷயமாக உள்ளது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
வீழ்ச்சி காணலாம்
தற்போது சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கமாடிட்டி பொருட்களின் விலையானது, நீண்டகாலத்திற்கு நீடித்தால் இன்னும் பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை, இயற்கை எரிவாயு விலை, உணவு, உரங்கள் மற்றும் உலோகங்கள் விலை என பல முக்கிய மூலப் பொருட்களின் விலையும் அதிகரித்தால் அது வணிகத்தினை பாதிக்கலாம்.
சராசரி பணவீக்க விகிதம்
நடப்பு நிதியாண்டில் சராசரி பணவீக்க விகிதம் 5.3% ஆக இருக்கலாம். இது 5.3 மற்றும் 5.0 மற்றும் 5.7 சதவீதம் வரையில் ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இது இந்தியா கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்து வருவதால், சர்வதேச சந்தையின் எதிரொலி இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலிக்க கூடும். மொத்தத்தில் இதன் தாக்கம் தீவிரமாக இருக்க கூடும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications