மும்பை: இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், தற்போது தான் பொருளாதாரம் விரைவாக மீண்டு வர தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 11% ஆக வளர்ச்சி காணலாம் என்றும் மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டிலேயே கொரோனா பவரல் காரணமாக இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டது. இந்த நிதியாண்டின் முதல் பாதியில் வரலாறு காணாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சியினை பதிவு செய்தது. இந்த நிலையில் மூன்றாவது காலாண்டில் சற்றே இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இது நான்காவது காலாண்டில் சற்றே வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தான் அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் மீள்ச்சி காணும் என பல மதிப்பீட்டு நிறுவனங்களும் மதிப்பிட்டு வருகின்றன. இந்த நிலையில் கிரிசில் நிறுவனம் 2021 - 22ம் நிதியாண்டில் 11 சதவீதம் வளர்ச்சி காணும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 8 சதவீதம் வீழ்ச்சியினை காணும் என்றும் கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் கொரோனாவுக்கு மத்தியில், பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பினை இழந்தனர். தொழிற்சாலைகள் முடங்கின. முக்கிய வருவாய் ஆதாரங்கள் முடங்கின. இதனால் பொருளாதாரம் பெரும் சரிவினைக் கண்டிருந்தது. எனினும் தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பலவும் வழக்கம்போல செயல்பட ஆரம்பித்துள்ளன. இதனால் பொருளாதாரம் மீண்டு வர தொடங்கியுள்ளது.
இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனாவுக்காக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது நிச்சயம் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2022ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது பல மடங்கு வேகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகின்றது. முக்கிய துறைகளின் வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நுகர்வும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications