டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சியை அளவிடும் சில முக்கிய குறியீடுகளில் ஒன்று தான் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.7% ஆக சற்று அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய காலாண்டில் ஜிடிபி விகிதம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டிருந்த நிலையில் 4.5% ஆக வீழ்ச்சி கண்டிருந்தது கவனிக்கதக்கது.
ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்படும் தீங்கு விளைவிப்பதால் நடப்பு காலாண்டில் வளர்ச்சி முடக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதன் முழு விளைவுகள் இன்னும் நிச்சயமற்றவை. எனினும் கோல்டுமேன் சாச்சஸ் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 4.9% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது முன்பு 5.4% ஆக கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே அரசே நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 5% ஆக இருக்கும் என்றும் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
இந்த வளர்ச்சி விகிதமானது 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது 2020- 21ம் நிதியாண்டிற்கான வளர்ச்சி 6% ஆக உயர்த்துவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்று வெளியான தரவில் இந்தியாவில் உள்கட்டமைப்பு உற்பத்தி 2.2% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம், சுத்திகரிப்பு போன்ற எட்டுத்துறைகளை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு உற்பத்தி நாட்டின் தொழில் துறை உற்பத்தியில் கிட்டதட்ட 40% ஆகும். இந்த நிலையில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 2.2% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது டிசம்பர் காலாண்டின் வளர்ச்சிக்காக உதவியது என்றே கூறலாம். இதே உள்கட்டமைப்பு துறை 1.5% ஆக ஜனவரியில் விரிவடைந்துள்ளது. இது டிசம்பர் காலாண்டில் வளர்ச்சிக்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கையின் அறிக்கையின் படி, சீனாவில் இருந்து 19 வகையான பொருட்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீடித்து வரும் இதன் தாக்கத்தினால் அடுத்து வரும் மார்ச் காலாண்டில் முந்தைய விகிதங்களை விட ஜிடிபி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்தியாவிற்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள், மூலதன பொருட்களாக உள்ளன. இதனால் அடுத்து வரும் காலாண்டிலும் வளர்ச்சியை பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications