டெல்லி: 2025 ஆம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருக்கிறது. தேசிய புள்ளியியல் அலுவலகம் ஒவ்வொரு காலாண்டிலும் இந்திய பொருளாதார நிலை குறித்த தரவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டில் செப்டம்பர் முதல் டிசம்பருடன் முடிவடைந்து காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.2% என உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி ஆனது 8.6 % ஆக இருந்தது. இதற்கு முந்தைய காலாண்டில் அதாவது ஜூலை முதல் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.4% ஆகத்தான் இருந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஜிடிபி குறைந்திருக்கிறது, கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது சற்றே அதிகரித்துள்ளது. அதேபோல கிராஸ் வேல்யூ ஏடட் (Gross value Added) எனப்படும் GVA வளர்ச்சி என்பது 2025 ஆம் நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 6.2 சதவீதமாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 6.8 சதவீதமாக இருந்தது. முந்தைய காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்தது.
2025ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். ஏனெனில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 5.4 சதவீதம் என ஜிடிபி குறைந்து அதிர்ச்சியை தந்தது. இந்நிலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் விளைவாகவே மூன்றாவது காலாண்டில் ஜிடிபி 6.2 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.8 சதவீதம் வரை இருக்கும் என கணித்தது. 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது , இது இரண்டாவது காலண்டில் 5.4 சதவீதமாக குறைந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்திய பொருளாதார சரிவடைந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து தற்போது மீண்டும் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்பி இருக்கிறது. மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி அதிகரித்திருப்பதால் மொத்தமாக 2025ஆம் நிதியாண்டு முழுவதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேளாண் துறை வளர்ச்சி பாதைக்கு திரும்பி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது. ஆனால் உற்பத்தி மற்றும் சுரங்க துறைகள் மந்தமாகவே இருக்கின்றன.
story written: Devika
More From GoodReturns

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!



Click it and Unblock the Notifications