இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் சுமார் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று மாலை தெரிவித்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் 2024 ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதம் உயர்ந்து 4 காலாண்டு உயர்வை தொட்டு, சந்தை கணிப்பை ஈடு செய்துள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஜூன் காலாண்டில் மத்திய மாநில அரசுகள் தனது மூலதன செலவீட்டை பட்ஜெட்க்கு பின்பு அதிகரித்த நிலையில், பெரிய அளவிலான வளர்ச்சியை இக்காலக்கட்டத்தில் பதிவு செய்துள்ளது.

ஆனால் நாமினல் ஜிடிபி அல்லது நிலையான விலையிலான ஜிடிபி அளவீட்டில் ஜூன் காலாண்டில் 8.0 சதவீதம் பதிவாகியுள்ளது. 2023 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 27.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் துறைவாரியாக பார்க்கும் போது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஜூன் காலாண்டில் வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறை 9.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த காலாண்டில் 9.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் மற்றும் நிதியியல் துறை ஜூன் காலாண்டில் 12.2 சதவீதமும், கட்டுமானம் 7.9 சதவீதமும், சுரங்க துறை 5.8 சதவீதமும், உற்பத்தி துறை 4.7 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் விவசாயம் 3.5 சதவீதமும், மின்சார துறை 2.9 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இந்திய ஜிடிபியில் சுமார் 57.3 சதவீதம் பங்கு கொண்ட தனியார் நுகர்வு அளவீடு ஜூன் காலாண்டில் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.5 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்ட நிலையில் 7.8 சதவீத வளர்ச்சி பதிவாகி அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications