இந்திய பொருளாதாரம் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.3% வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் 13.5% ஆக இருந்தது. இது கொரோனா காலத்தில் சாதகமாக இருந்த காரணிகள் தற்போது சரியத் தொடங்கி விட்டன.
அதேசமயம் பணவீக்க விகிதம் என்பது உச்சத்தில் இருந்து வருகின்றது. பணவீக்கத்தினை குறைக்க மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது.
இதற்கிடையில் தான் இரண்டாவது காலாண்டு வளர்ச்சி குறித்தான அதிகாரப்பூர்வ அறிக்கையானது வெளியாகியுள்ளது.
நிபுணர்களின் கணிப்பு
கடந்த ஆண்டு ஜூலை -செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.4% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இது குறித்த தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் ஜிடிபி விகிதமானது 6.2% மேலாக வளர்ச்சி காணலாம் என கணித்திருந்தனர்.
மூலதன செலவினம் அதிகரிப்பு
இந்த தரவானது முதல் காலாண்டில் விவசாயம் மற்றும் உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் விரிவாக்கம் குறித்த தரவுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு சாலைகள் முதல் ரயில்வே வரையிலான உள்கட்டமைப்புக்கான செலவினங்களை முடுக்கிவிட்டதால், மூலதன செலவினங்கள் 40% அதிகரித்துள்ளது.
முக்கிய துறைகளில் வளர்ச்சி
முக்கிய துறைகளில் விவசாயத் துறையில் உற்பத்தி வளர்ச்சியானது 4.6% அதிகரித்துள்ளது. இதே உற்பத்தி துறையில் 4.3% வளர்ச்சி குறைந்துள்ளது. அதிகளவில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் துறையான கட்டுமான துறையின் செயல்பாடு 6.6% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
நாமினல் ஜிடிபி
நாமினல் ஜிடிபி வளர்ச்சியானது இரண்டாவது காலாண்டில் 65.31 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்படுள்ளது. இதே கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 56.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 19% ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 16.2% வளர்ச்சியினை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications