இந்தியப் பொருளாதாரத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் இன்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்தபடியே 20.1 சதவீதம் என்ற வரலாற்று உயர்வைப் பதிவு செய்துள்ளது.
ஆனால் மத்திய அரசு 2 முறை நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தும் 2019-20ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டு அளவீட்டை இன்னமும் அடையவில்லை என்பது தான் தற்போது வருத்தமான செய்தியாக உள்ளது.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி
இந்திய பொருளாதாரம் 2021-22 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 32.38 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் அதாவது கொரோனா தொற்று காலகட்டமான 2020-21 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 26.95 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்தது. இவ்விரு காலாண்டை ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் மொத்த ஜிடிபி அளவு 20.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம்
கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி அளவு சுமார் -24.4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது யாராலும் மறக்க முடியாது. ஆனால் இதேவேளையில் மத்திய அரசு 2 முறை மிகப்பெரிய தொகைக்குப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. ஆனாலும் இந்தியப் பொருளாதாரம் 2019-20 ஜூன் காலாண்டு அளவீட்டை அடையவில்லை.
வளர்ச்சி அளவீடுகள்
முக்கியத் துறைகள் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி அளவீடுகள்
விவசாயம், மீன்பிடி துறை : 4.65 லட்சம் கோடியில் இருந்து 4.86 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 4.5 சதவீதம் வளர்ச்சி
இதேபோல் சுரங்கம் மற்றும் குவாரி : 18.6 சதவீதம் வளர்ச்சி
உற்பத்தி துறை : 49.6 சதவீதம் வளர்ச்சி
மின்சாரம், கேஸ், தண்ணீர் விநியோகம் : 14.3 சதவீதம் வளர்ச்சி
கட்டுமான துறை : 68.3 சதவீதம் வளர்ச்சி
வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, கம்யூனிகேஷன், சேவை துறை : 34.3 சதவீதம் வளர்ச்சி
நிதியியல் ரியல் எஸ்டேட் : 3.7 சதவீதம் வளர்ச்சி
பொது நிர்வாரம், பாதுகாப்பு மற்றும் இதர சேவை துறை : 5.8 சதவீதம் வளர்ச்சி
8 முக்கியத் துறைகள்
இந்த 8 முக்கியத் துறைகள் 2020-21 ஜூன் காலாண்டில் -22.4 சதவீத சரிவை எதிர்கொண்டு இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 18.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் GVA அளவு கடந்த நிதியாண்டில் 25.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்து, தற்போது 30.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2019 அளவீடு
ஆனால் 2019-20 நிதியாண்டில் ஜூன் காலாண்டில் 33.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த அளவீட்டை இன்றளவும் அடையவில்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications