நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது மீண்டு வந்து கொண்டுள்ளது.
இதற்கிடையில் ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது, நடப்பு நிதியாண்டில் 8.3% வளர்ச்சியை காணலாம் என உலக வங்கி கணித்துள்ளது.
தற்போது நாட்டின் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சேவைகளும் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது.
ரியல் ஜிடிபி
இந்த நிலையில் ரியல் ஜிடிபி விகிதமானது நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதமாக வளர்ச்சி காணலாம் என்று உலக வங்கி கணித்துள்ளது. இது முன்னதாக மார்ச் மாதத்தில் 1.8 சதவீதம் சரிவை காணலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம், 9.5 சதவிகித வளர்ச்சி காணலாம் என்று கணித்துள்ளது.
தடுப்பூசி விகிதம்
மற்ற நிபுணர்களும் கிட்டத்தட்ட 10 சதவீதம் வரையில் வளர்ச்சி காணலாம் என்று கணித்து வருகின்றனர். இது நாட்டில் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு தடுப்பூசிகளை விரைந்து போட்டு வரும் நிலையில், இது இன்னும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தேவை அதிகரிக்கும்
இது மேற்கொண்டு பொது முதலீட்டை ஊக்குவிப்பதோடு, தேவையும் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளனர். மேலும் தேவையை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களையும் ஊக்குவித்து வருகின்றது. இது உற்பத்தி விகிதத்தை அதிகரிக்கும் என்றும், இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மேற்கொண்டு வளர்ச்சியை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர்
அடுத்த இரண்டு - மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சுமார் 7 சதவிகிதம் என்ற வலுவான வளர்ச்சியினை காணலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையில் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹேன்ஸ் டிம்மர், இந்தியாவின் ஜிடிபி வீதமானது 8.3 சதவீதமாக இருக்கலாம். இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பொது முதலீடுகளும், தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை இருக்கலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
அரசின் ஊக்க நடவடிக்கைகள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் நிதித்துறையில் நிலவிவரும் சவாலான நிலைகளுக்கும் மத்தியில், பொருளாதாரம் சற்றே அழுத்தத்தினை கண்டாலும், அரசு பல்வேறு சலுகையும், ஊக்கத்தினையும் அறிவித்து வருகின்றது. இது பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகுக்கும், எனினும் கொரோனாவின் அடுத்த கட்ட அலையானது வரலாம் என்ற சந்தேகத்தின் மத்தியில், தொடர்ந்து தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டு வருகின்றது.
வட்டி விகிதம் எப்போது அதிகரிக்கும்
இதற்கிடையில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், இதனை தற்போது வரையில் அதிகரிக்கவில்லை. இது எப்போது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்றும் உறுதியாக தெரியவில்லை. இது மேலும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. எனினும் இது பணவீக்கத்தையும் ஊக்குவிக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
தற்போதைக்கு மாற்றம் இருக்காது
எப்படி இருப்பினும் குறைவான வட்டி விகிதமானது நாட்டில் தேவையை ஊக்குவிக்கலாம். இது பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் நிலவிவருகிறது. ஆக தற்போதைக்கு வட்டி விகிதமானது மாற்றம் இருக்காது என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது இன்னும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications