நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்பது சற்றே மீள்தன்மையுடன் இருக்கும் என உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் பிற்பாதியில் பொருளாதாரம் என்பது சற்றே அழுத்தத்தினை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.
மெதுவான வளர்ச்சி
எனினும் மெதுவான வளர்ச்சி விகிதம், வருமானம் சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், நுகர்வு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியாவின் பொருளாதாரம் 2024ம் நிதியாண்டில் 6.3 சதவீதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லறை பணவீக்கம்
இதே 2023 - 24ம் நிதியாண்டில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் என்பது 6.6 சதவீதத்தில் இருந்து, 5.2 சதவீதமாக குறையும் என கணித்துள்ளது. இதே நடப்பு கணக்கு பற்றாக்குறை 2024ம் நிதியாண்டில் 5.2% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது.
முந்தைய கணிப்பு
உலக வங்கி முன்னதாக கடந்த டிசம்பர் 2022ல் இந்தியாவின் ஜிடிபி 6.6% ஆக இருக்கலாம் என கணித்திருந்த நிலையில், தற்போது அதனை 6.3% ஆக குறைத்துள்ளது, எனினும் வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்திற்கு மேலாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இது நுகர்வு குறையலாம் என்ற அச்சத்தினை சுட்டிக் காட்டியுள்ளது.
வளர்ச்சி குறையலாம்
தொடர்ந்து கடன்களுக்கான வட்டி விகிதம் என்பது அதிகரித்து வரும் நிலையில், நுகர்வு வளர்ச்சியானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உற்பத்தி துறை, உள்கட்டமைப்பு துறை என பலவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்த துறையில் பெரியளவிலான வேலைகள் என்பது தாக்கத்தினை எதிர்கொண்டன. எனினும் கொரோனா தொற்றை அடுத்து இவை மேம்பட்டன.
முக்கிய காரணிகள்
எனினும் வலுவான தேவையானது இனி அதிகரித்து வரும் நிலையில், அதிகளவிலான பொது முதலீடுகள், பொது வளர்ச்சி என பலவும் அதிகரித்து வருகின்றன. எனினும் நுகர்வோர் செலவினங்கள் என்பது குறைந்து வருகின்றது. இது வருமானம் குறைந்து வருவதால் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜிடிபி வளர்ச்சி
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதமானது டிசம்பர் காலாண்டில் 4.4% ஆக வளர்ச்சி கண்டு வருகின்றது. இது முந்தைய காலாண்டினை காட்டிலும் 11.2% ஆக சரிவினைக் கண்டுள்ளது.. இது முந்தைய காலாண்டில் 6.3 சதவீதமாக இருந்தது.
இதே இந்தியாவின் சேவை ஏற்றுமதியானது கடந்த டிசம்பர் மாதத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு தொட்டுள்ளது. எனினும் தற்போது சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி சரிவு
ஆர்பிஐ தரவின் படி, சேவை ஏற்றுமதியானது டிசம்பர் காலாண்டில் 24.5% அதிகரித்து, 83.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. சேவை துறையில் உபரி என்பது 39.21% அதிகரித்து, சாதனை படைத்து 38.7 பில்லியன் டாலரையும் கண்டுள்ளது.இதன் காரணமாக ஜிடிபி-யில் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 2.2 சதவீதம் குறைந்துள்ளது.
மற்றவர்களின் கவனம்
தொடர்ந்து எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் காணவில்லை. எனினும் இது பணவீக்கத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் உலக வங்கி வளர்ச்சி விகிதத்தினை குறைத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications