நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பொருளாதாரம் மிக பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மார்ச் மாதத்தில் பிற்பாதியில் கொரோனாவின் தாக்கம் தொடங்கியிருந்தாலும், அதற்கு முன்னரே உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, சரியான மூலதன பொருட்கள் இல்லாமையால் உற்பத்தி பாதிப்பு என பெரும் பின்னடை சந்தித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி விகிதம் 3.1 சதவீதமாக குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மூன்றாவது காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே 2019-20ம் நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதமானது 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2 சதவீதமாக வீழ்ச்சி காணலாம் எனவும் மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கணித்துள்ளது.
இதுவே கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியானது 6.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதமானது 5.2%, இரண்டாவது காலாண்டில் 4.4%, மூன்றாவது காலாண்டில் 4.1% ஆகவும் இருந்த நிலையில், கடைசி காலாண்டில் வளர்ச்சியானது 3.1 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தாலும், கடைசி காலாண்டிலன் தரவுகளில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட்ட லாக்டவுன் காரணமாக ஓரளவு ஜிடிபி விகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் சில நிறுவனங்கள் இன்னும் தங்களது நிதி நிலை அறிக்கை செயல்பாடுகளை தொடங்கவில்லை. இதனால் இந்த ஜிடிபி தரவுகள் திருத்தற்திற்கு உட்படலாம் என்றும் கூறியுள்ளது.
இதே முக்கிய துறைகளின் வளர்ச்சியானது -38.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் -9 சதவீதமாக உள்ளது.
குறிப்பாக நிலக்கரி உற்பத்தி கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 15.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே சிமெண்ட் உற்பத்தி 86 சதவீதம் வீழ்ச்சி கண்டும், இரும்பு உற்பத்தி 83.9 சதவீதமும், கச்சா எண்ணெய் 6.4 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 19.9 சதவீதமும்,உர உற்பத்தியானது 4.5 சதவீதம் வீழ்ச்சியும் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications