நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 8% சரியலாம்.. ஃபிக்கி கணிப்பு!

டெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 8% சரிவடையும் என இந்திய வர்த்தக தொழில் துறை அமைப்பு கணித்துள்ளது.

ஃபிக்கியின் அவுட்லுக் கணக்கெடுப்பு என்ற இந்த ஆய்வு, தொழில் துறை மற்றும் வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையை பிரதி நிதித்துவப்படுத்தும் முன்னனி பொருளாதார வல்லுனர்களின் பதில்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வு நடப்பு மாதத்தில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் நடப்பு நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறையில் வளர்ச்சி 3.5% ஆக இருக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறை

விவசாயத் துறை

கொரோனாவுக்கு மத்தியில் இந்த துறையானது சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும் இது அதிக ராபி பயிர், நல்ல பருவமழை, அதிக நீர்தேக்கம் மற்றும் வலுவான டிராக்டர் விற்பனை வளர்ச்சி ஆகியவை இந்த துறையில் தொடர்ந்து வளர்ச்சியினைக் காட்டுகின்றன.

Array

Array

இதே தொழில் துறை மற்றும் சேவைத் துறைகள் கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் முறையே நடப்பு நிதியாண்டில் 10% மற்றும் 9.2% சரிவினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் துறையில் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது. எனினும் இன்னும் முழுமையாக வளர்ச்சி காணவில்லை.

தேவையை அதிகரிக்க வேண்டியது அவசியம்

தேவையை அதிகரிக்க வேண்டியது அவசியம்

எனினும் பண்டிகை காலத்தில் நுகர்வுகள் அதிகரித்தது. அதனை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்வது அவசியம் என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா, விருந்தோம்பல், கல்வி மற்றும் சுகாதாரத்துறை போன்ற தீவிர சேவைத் துறைகளில் சில இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதற்கிடையில் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி 1.3% சரிவினைக் காணலாம் என்றும் கணித்துள்ளது. எனினும் நான்காவது காலாண்டில் 0.5% வளர்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது.

அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி காணலாம்

அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி காணலாம்

எபப்டி இருப்பினும் அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது 2021 - 22ம் நிதியாண்டில் 9.6% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர். கொரோனாவின் காரணமான மிக மோசமான சரிவுக்கு தள்ளப்பட்ட பொருளாதாரம், மீண்டும் இயல்பாக்கப்பட்டு வரும் நிலையில், இது அடுத்த ஆண்டில் ஒரு சாதகமான நிலைக்கு தள்ளப்படும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+