டெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 9% சரிவடையும் என சர்வதேச ரேட்டிங் நிறுவனமான எஸ்&பி ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.
இது கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. அதோடு பலவீனமான நிதி நெருக்கடியான நிலையானது, அரசாங்கத்தின் ஆதரிக்கும் திறனைக் கட்டுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீட்டு நிறுவனம், இந்தியாவின் நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நாணய இறையாண்மை மதிப்பீட்டை BBB -யாக உறுதிபடுத்தியுள்ளது. அதோடு குறுகிய கால மதிப்பீடான A -3 யையும் மாற்றவில்லை. இது நாட்டின் மேம்பட்ட நிலையையே சுட்டிக் காட்டுகிறது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 9 சதவீதம் வீழ்ச்சி காணும் என்று எஸ் & பி எதிர்பார்க்கிறது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 2022ம் நிதியாண்டில் 10 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என்றும் கணித்துள்ளது. இது பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் அதிக திறனை சுட்டிக் காட்டியுள்ளது. இதனால் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் கூறியுள்ளது.
நட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காணும். தற்போது பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு, லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், வளர்ச்சி மிக மெதுவாகவே காணப்படுகிறது.
இது கொரோனாவினால் மட்டும் அல்ல, கொரோனாவிற்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான ம்ந்த நிலையிலை கண்டு இருந்தது. எனினும் கடந்த மே மாதத்தில் இந்திய அரசு பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்கத்தினை கொடுத்தது. ஆனால் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாயாவது நிதி ஊக்கத்தினை கொடுக்க வேண்டியிருக்கும். ஆக அரசின் கூடுதலான ஊக்கத்தொகையானது, ஆழ்ந்த வீழ்ச்சியில் இருந்து இந்தியாவினை காப்பாற்றும். எனினும் அரசாங்கத்தின் பலவீனமான நிதியினையும் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் நிதி ஊக்கத் திட்டத்தின் கீழ் நேரடி அரசாங்க செலவினம், இதுவரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.2% ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை போன்று வளர்ந்து வரும் நாடுகள், மொத்த ஜிடிபியில் சுமார் 3% செலவழித்துள்ளன. எனினும் இந்திய பொருளாதாரம் நீண்ட கால நோக்கில் நல்ல செயல்திறனைக் கொண்டிருக்கும். ஏனெனில் எஸ் & பி மக்கள் தொகை மற்றும் குறைந்த தொழிலாளர் செலவுகளில், அதன் வலிமையை சுட்டிக் காட்டுகிறது. அதோடு அரசின் சில நடவடிக்கைகள் பொருளாதாரத்தினை ஊக்கவிக்க உதவும் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications