இந்தியாவின் ஜிடிபி விகிதம் நடப்பு நிதியாண்டில் 8.6 சதவீதமாக வீழ்ச்சி காணலாம் என்று யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இந்த ஜிடிபி விகிதமானது முன்பு 5.8 சதவீதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு இந்தியாவின் வளர்ச்சியினை விரைவில் மீட்க விரைவான நிதி ஊக்கமும் தேவை எனவும் இந்த செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.
யுபிஎஸ் கவரேஜின் கீழ் உள்ள 42 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால் இந்தியாவில் இன்னும் வீழ்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருப்பதால், ஜிடிபி விகிதத்தினை குறைத்துள்ளோம் என யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெதுவான வளர்ச்சி
உலகின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக ஆசியாவின் பல பகுதிகளில் வளர்ச்சியினை நேர்மறையாக மாற்றியமைக்கிறோம். அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் காணப்படும் முரண்பாடான விஷயம், இந்தியாவின் வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. ஆனால் இது மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மெதுவான வேகத்தில் உள்ளது என்றும் யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை பொருளாதார நிபுணர் தன்வீ குப்தா ஜெயின் தெரிவித்துள்ளார்.
பணவீக்க விகிதம்
அதோடு செப்டம்பர் காலாண்டிலும் பணவீக்க விகிதமானது முந்தைய காலாண்டினை இருப்பதை போலவே காண்கிறது. எனினும் டிசம்பர் 2020க்குள் 3.5 - 4% குறையும் எனவும் எதிர்பார்க்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் பணவீக்க விகித அபாயங்கள் இருந்தாலும், அக்டோபர் மாதத்திற்கு பிறகு இது சற்று மென்மையாகக் கூடும் என்றும் ஜெயின் கூறியுள்ளார்.
என்ன காரணம்?
இந்த பணவீக்கம் அதிகரிப்புக்கு யுபிஎஸ் மூன்று காரணங்களை கூறுகின்றது. ஒன்று லாக்டவுன் காரணமாக விநியோக சங்கிலி பாதிப்பு, இதனால் பொருட்களின் விலை அதிகரிப்பு. இரண்டாவது வரி அதிகரிப்பினால் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு, மூன்றாவது சர்வதேச கமாடிட்டிகளில் விலை அதிகரிப்பது. உதாரணத்திற்கு தங்கம் விலை அதிகரிப்பு போன்ற விலைகள் பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
வளர்ச்சியினை புதுபிக்க மூன்று வழிகள்
அடுத்து வரும் ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் 25 - 50 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பும் இருக்கலாம் என்றும் யுபிஎஸ் எதிர்பார்க்கிறது. அதோடு பொருளாதார வளர்ச்சியினை புதுபிக்க அரசு மூன்று வழிகளில் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ஒன்று உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்காக செலவிட வேண்டும். இரண்டாவது ஊரக மற்றும் நகர்புற வேலைவாய்ப்பு திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
இந்தியா ஒரு கவர்ச்சிகரமான நாடு
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பார்மா மற்றும் எலக்ட்ரானிக் துறைகளுக்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தினை மற்ற துறைகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதோடு தற்போது சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளியேற நினைக்கின்றன. அவைகள் இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான இடமாகவும் பார்க்கின்றன. ஏன் அவற்றை இந்தியா வளர்ச்சியினை அதிகரிக்க சாதகமான ஒன்றாக பயன்படுத்தக்கூடாது என்றும் ஜெயின் கூறியுள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications