இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) 5.8 சதவீதமாக இருக்கலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.4% ஆக வளர்ச்சி கண்டது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையினை எட்டியுள்ளது.
எப்படியிருப்பினும் ஜுலை - செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி விகிதமானது முந்தைய காலாண்டினை விட வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது.

மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி அறிவிப்பினை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய கணிப்பினை காட்டிலும் 2022ம் நிதியாண்டில் ஜிடிபி கணிப்பானது, 9.3% ஆக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது தற்போது 8.8% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரியல் ஜிடிபி விகிதமானது சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய்/ 1.6% அதிகரித்துள்ளது. இது கடந்த 2020ம் நிதியாண்டில் ரியல் ஜிடிபி விகிதமானது 145.69 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தனியார் நுகர்வானது அதிகரிப்பினை கண்டு வருகின்றது. இது கொரோனாவுக்கு முந்தைய அளவினை எட்டியுள்ளது.
இதற்கிடையிம் மூன்றாவது காலாண்டில் தேவையானது உச்சத்தினை எட்டியுள்ளது. எனினும் கிராமப்புற தேவையானது இன்னும் முழுமையாக மீண்டு வந்ததாக தெரியவில்லை. குறிப்பாக இருசக்கர வாகன விற்பனை மற்றும் டிராக்டர் விற்பனை என்பது ஆகஸ்ட் 2021 முதல் சரிவிலேயே இருந்து வருகின்றது. எனினும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நகர்புறங்களில் கன்சியூமர் டியூரபிள் குட்ஸ் மற்றும் பயணிகள் வாகன விற்பனையானது மூன்றாவது காலாண்டில் சரிவினையே கண்டுள்ளது. ஓமிக்ரான் மத்தியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த ஆண்டினை காட்டிலும் அன்னிய முதலீட்டு விகிதமானது அதிகரித்துள்ளது. அதோடு கடன் விகிதமும் முந்தைய ஆண்டினை காட்டிலும் அதிகரித்துள்ளது. திரும்ப செலுத்த விகிதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுகர்வு விகிதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதமானது எதிர்பார்க்கும் வளர்ச்சியினை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications