நடப்பு நிதியாண்டின் ஜிடிபி விகிதம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பலத்த சரிவினைக் காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் இந்த காலகட்டத்தில் கொரோனாவினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு லாக்டவுனை அறிவித்திருந்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையும் முடங்கியிருந்தது.

இதற்கிடையில் எதிர்பார்த்ததை போலவே முதல் காலாண்டில் ஜிடிபி விகிதம் 23.9 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த 1996ம் ஆண்டு முதல் காலாண்டு அடிப்படையில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவைத் தொகுத்த தொடங்கியதில் இருந்தே, இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான காலாண்டு வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த, அரசு நாடு தழுவிய லாக்டவுனை போட்டது. இதனால் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டது. ஏனெனில் பொருளாதார வளர்ச்சியினை தூண்டும் அனைத்து நடவடிக்கையும் இந்த காலகட்டத்தில் தடைபட்டது.
தற்போதைய விலையில், மொத்த உள் நாட்டு உற்பத்தி விகிதம் 38.08 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 49.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே ஜிவிஏ விகிதமானது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 22.6% ஆக சரிந்து காணப்படுகிறது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.1% வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த ஜிவிஏ விகிதமானது தற்போதைய மதிப்பில் 35.66 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 44.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 20.6% வீழ்ச்சியாகும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பொருளாதார நிபுணர்கள் முதல் காலாண்டில் ஜிடிபி விகிதம் 16.5% சுருங்கும் என கணித்திருந்தனர். இதுவே கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் 20.2% சரியும் எனவும் கணித்திருந்தது. இதே பார்க்லேஸ் நிறுவனம் 25.5% சரியும் எனவும், கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் 45% ஜிடிபி விகிதம் வீழ்ச்சி காணும் எனவும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஜிடிபி விகிதமானது 23.9% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இது கடந்த காலாண்டில் நிலவி வந்த நெருக்கடியான நிலையினையே சுட்டிக் காட்டுகின்றது.


Click it and Unblock the Notifications