இந்தியாவின் மூன்றாவது காலாண்டு முடிவானது இன்று வெளியாகவுள்ளது. இது இன்று சந்தையிலும் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இரட்டை இலக்கில் வளர்ச்சி கண்ட நிலையில், இரண்டாவது காலாண்டில் 6.3% எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 13.5% எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கை என்பது சீரற்றதாக இருக்கலாம்.
வளர்ச்சி என்பது மிதமான வேகத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகள் நல்ல ஏற்றம் காண வாய்ப்புள்ளது.
நிபுணர்களின் கணிப்பு?
டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.7% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய காலாண்டில் 6.3% ஆக இருந்தது. எனினும் சில நிபுணர்கள் பொருளாதாரம் மேற்கொண்டு வலுவடைவதை காட்டலாம் என தெரிவித்துள்ளனர். டிசம்பர் காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் வளர்ச்சி என்பது மேம்படலாம் என தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நிலை
சர்வதேச பொருளாதாரம் என்பது தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், நிலையற்ற ஒன்றாக இருந்து வருகின்றது. இது ஊக்குவிக்கும் அளவுக்கு இல்லை. இதற்கிடையில் பணவீக்கம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆக இந்திய பொருளாதாரம் என்பது 4 - 4.5% எனும் அளவுக்கு வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிடிபி சரியலாம்
பல்வேறு தரகு நிறுவனங்களும் ஜிடிபி விகிதத்தினை குறையலாம் என கணித்துள்ளன. ஆக இது தொடர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. வளர்ந்துள்ள பெரும்பாலான பொருளாதார நாடுகள் கூட வளர்ச்சியினை காட்டுகின்றன. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
நடப்பு ஆண்டில் என்ன நிலவரம்?
மூன்றாவது காலாண்டு மட்டும் அல்ல, 4வது காலாண்டிலும் வளர்ச்சி தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சி கணிப்பினை குறைக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் வளர்ச்சி விகிதம் என்பது 6.5% ஆக இருக்கலாம்.
ICRA எதிர்பார்ப்பு
ICRA நிறுவனம் ஜிடிபி வளர்ச்சி விகிதம் என்பது மூன்றாவது காலாண்டில் 5.1% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. எப்படியிருப்பினும் இது கொரோனாவுக்கு முந்தைய லெவலை எட்டலாம். தொடர்ந்து வளர்ச்சி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என ICRA எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications