இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவு கொரோனா தொற்றுக்கு பின்பு அதிகளவில் சரிந்துள்ளது, குறிப்பாக அனைத்து கல்வி பிரிவுகளின் வேலைவாய்ப்பின்மை அளவும் குறைந்துள்ளது. ஆனால் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்மை அளவு தொடர்ந்து 15 சதவீதத்திற்கு மேல் இருப்பது பெரும் கவலைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இப்படியிருக்கையில் ஸ்டேட் ஆஃப் வொர்கிங் இந்தியா 2023 என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில் இந்தியாவில் படித்த பட்டதாரிகள் குறிப்பாக 25 வயதிற்கு கீழ் உள்ள பட்டதாரிகள் 42 சதவீதம் பேர் வேலைவாய்ப்புகளை பெற முடியாமல் இருப்பதாகவும், இப்பிரிவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.

ஸ்டேட் ஆஃப் வொர்கிங் இந்தியா 2023 அறிக்கையை அசிம் ப்ரேம்ஜி பல்கலைகழகம் சமீபத்தில் மத்திய அரச வெளியிட்ட ப்ரீயாடிங் லேபர் ஃபோர்ஸ் சர்வே 2021-22 தரவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்து வெளியிட்டு உள்ளது.
அதிகம் படித்த மக்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அளவு பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது, உதாரணமாக 25 வயதிற்கு கீழ் உள்ள பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 40 சதவீதமாக இருக்கும் வேளையில் 35 வயதுக்கும் மேல் உள்ள பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை வெறும் 5 சதவீதமாக உள்ளது என ஸ்டேட் ஆஃப் வொர்கிங் இந்தியா 2023 ரிப்போர்ட் கூறுகிறது.
மேலும் இந்த அறிக்கையின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் மத்தியிலான உறவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை காட்டுகிறது. மத்திய மாநில அரசுகள் பொருளாதாரத்தை வேகமாக உயர்த்த கொண்டு வரப்படும் கொள்கைகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்குவது வேகப்படுத்தப்படாமல் இருக்கலாம் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.
கொரோனா தொற்று காலத்தில் விவசாயம் மற்றும் சுய தொழில்களில் நுழைந்த மக்களின் எண்ணிக்கை தடாலடியாக உயர்ந்தது. ஆனால் கடந்த 2 வருடத்தில் இது கணிசமாக குறைந்துள்ளது எனவும் இந்த அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும் சுயதொழில் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வியப்படையும் வகையில் அதிகரித்துள்ளது மிகவும் ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications