மூடீஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பின் படி 2023ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.5% ஆக வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது.
இது முன்னதாக 4.8% எனும் அளவுக்கு வளர்ச்சி காணலாம் என மதிப்பீடு செய்திருந்தது.
இது மூலதன செலவினங்கள் என்பதை அரசு கணிசமாக பட்ஜெட்டில் உயர்த்தியுள்ள நிலையில், வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என கணித்துள்ளது.
வளர்ச்சி எப்படியிருக்கும்?
எப்படியிருப்பினும் 2022ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்பது 6.8% ஆக வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது. இது முன்னதாக 7% ஆக கணித்திருந்தது.
பிப்ரவரி மாதத்தின் குளோபல் மேக்ரோ அவுட்லுக்கினை வெளியிட்ட மூடீஸ் நிறுவனம், 2023ம் ஆண்டின் உண்மையான வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பினையும் திருத்தம் செய்துள்ளது.
அண்டை நாடுகளின் வளர்ச்சி
இந்த அவுட்லுக்கில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் துருக்கி உள்ளிட்ட பல ஜி20 நாடுகளின் உண்மையான வளர்ச்சி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
இந்தியாவினை பொறுத்தவரையில் பட்ஜெட்டில் மூலதன செலவினங்கள் என்பது உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வளர்ச்சி விகிதம் நேர்மறையாக வந்துள்ளது. கடந்த பட்ஜெட் 2023ல் ஜிடிபியில் 3.3 எனும் அளவுக்கு 10 ட்ரில்லியன் ரூபாய் நிதியினை மூலதன செலவினத்திற்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏன் உயர்வு?
ஆக 2023ல் இந்தியாவின் உண்மையான ஜிடிபி விகிதம் 70 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 5.5% ஆக இருக்கலாம். இதே 2024ல் 6.5% ஆக இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.
2022ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வலுவான வளர்ச்சி என்பது உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்தான கணிப்புகள் என்பது உயர்ந்துள்ளது.
வேகமாக வளர்ச்சி
இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில், இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நெருக்கடிகள் சவால்கள் நிலவிய போதும், இந்தியாவின் நிதி சூழல் என்பது நல்ல விதத்தில் எதிர்பார்த்ததை விட சாதகமாக இருந்தது. இதன் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை ஆய்வு நிறுவனம் நேர்மறையாக வைத்துள்ளது.
ஏற்ற இறக்கம் இருக்கலாம்
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்குமா? அப்படி அதிகரிக்காத பட்சத்தில் அது மேற்கொண்டு இந்திய சந்தைக்கு சாதகமாக அமையலாம். எவ்வாறாயினும் பணவீக்கம் என்படு கட்டுக்குள் இருக்கும் வரையில் நிதிச் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம் என ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன..
சர்வதேச பொருளாதாரம்
உலகளாவிய சந்தையினை பொறுத்தவரையில் பல விதமான பொருளாதாரமும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஐரோப்பா தொடர்ந்து எரிபொருள் பிரச்சனையை சமாளித்துள்ளது. மொத்தத்தில் பல்வேறு நாடுகளின் நிதி நிலைமை என்பது மேம்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் தாக்கம்
எப்படியிருப்பினும் 2023ம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி என்பது மெதுவாகவே இருக்கும். ஏனெனில் பணவியல் கொள்கையில் இனியும் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வேலை வாய்ப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
உலகப் பொருளாதாரம்?
ஆக ஜி20 உலகப் பொருளாதாரம் என்பது 2022ல் 2.7% ஆக இருக்கலாம். இது 2023ல் 2% ஆக சரியலாம். இதே 2024ல் 2.4% ஆக வளர்ச்சி காணலாம். இதே சீனாவின் வளர்ச்சி விகிதம் என்பது 2023ல் 5% ஆக வளர்ச்சி காணலாம். இது 2022ல் 3% வளர்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications