அமெரிக்காவின் ஜிடிபி இந்தியாவை விட மோசமில்லை! உண்மை நிலவரம் தான் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சி கண்டது. இது நிபுணர்கள் எதிர்பார்த்ததை போலவே மிக மோசமான வீழ்ச்சியினையே கண்டுள்ளது.

இந்த ஜிடிபி விகிதமானது உண்மையில்லை. மாறாக இது இன்னும் மோசமாகலாம். ஏனெனில் உண்மையில் ஜிடிபியினை கணக்கிடும் அனைத்து தரவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது.

அமெரிக்காவின் ஜிடிபி இந்தியாவை விட மோசமில்லை! உண்மை நிலவரம் தான் என்ன?

இதனை உண்மை என்று ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே, ஜிடிபி வெளியான நாள் முதல் கொண்டே டிவிட்டரில் #GDPtruth என்ற ஹேஷ்டேக் பரப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஜிடிபி குறித்தான ஒரு அறிக்கை, ஜூன் காலாண்டில் அமெரிக்கா உள்ளிட்ட சகாக்களை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் கூறுகின்றது. ஆனால் உண்மை என்ன என்ற குழப்பமே நீடித்து வருகின்றது. ஏனெனில் இந்த ஜிடிபி விகிதங்களானது தவறானது என்ற கூற்றுகள் அதிகரித்து வருகின்றன.

ஏனெனில் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜூன் காலாண்டு ஜிடிபி 32 சதவீதம் சுருங்கியதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 23.9 சதவீதம் தான் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

மொத்த ஜிடிபியை கணக்கிடும்போது, ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு அணுகுமுறையை பின்பற்றி வருகின்றன என்று கேர் மதிப்பீட்டின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறியுள்ளார். நாங்கள் ஆண்டுக்கு ஆண்டு மதிப்பீடு செய்கிறோம். இன்னும் பலர் காலாண்டுக்கு காலாண்டு ஒப்பிடுகின்றனர்.

ஆக அமெரிக்காவும் இந்தியாவும் மொத்த ஜிடிபியினை எவ்வாறு தெரிவிக்கின்றன என்பதில் வித்தியாசம் உள்ளது. இந்தியாவில் ஜிடிபி விகிதம் முந்தைய ஆண்டில் இதே காலாணடுடன் ஒப்பிடுவதன் மூலம் ஜிடிபி கணக்கிடப்படுகிறது. அப்படி கணக்கிடப்பட்டு வந்த விகிதம் தான் 23.9% தான். இதே மறுபுறம் அமெரிக்காவில் ஜிடிபி விகிதம் முந்தைய காலாண்டோடு ஒப்பிடப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா பொருளாதரத்திற்கான சரிவு மதிப்பு 9.1% ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆக அமெரிக்கா இந்தியாவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டவை. அவற்றை ஒப்பிடமுடியாது. ஒன்று இந்த காலாண்டில் நடந்ததை முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகிறது. மற்றொன்று இந்த காலாண்டினை முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகிறது. சொல்லப்போனால் கடந்த ஜூன் காலாண்டில் சீனா தவிர, அனைத்து நாடுகளின் ஜிடிபி விகிதமும், வீழ்ச்சி கண்டுள்ளது உண்மை தான். எனினும் அமெரிக்காவை விட இந்தியா வளர்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுவது, நிபுணர்கள் சொல்வதைப்போல் சற்று யோசிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s growth rate didn’t better than US growth rate

India’s growth rate didn’t better than US growth rate, because some countries are use different approaches when calculating GDP rate.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X