இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 2024ம் நிதியாண்டில் 6.1% ஆக வளர்ச்சி காணலாம் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.
இது நடப்பு நிதியாண்டில் 6.8% ஆக வளர்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது.
தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையும் உச்சத்தில் காணப்படுகின்றது.
படிப்படியாக வளர்ச்சி
அதிகளவிலான கச்சா எண்ணெய் விலை, தேவையில் ஏற்பட்ட சரிவு, நெருக்கடியான நிதி நிலைமை என பல காரணிகளுக்கும் மத்தியில் இந்திய பொருளாதார வளர்ச்சி அடுத்த 2 ஆண்டுகளுக்கு படிப்படியாக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனால் பொருளாதாரம் பாதிப்பினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி Vs பணவீக்கம்
எனினும் இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியினை விட, பணவீக்கம் அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8% ஆக வளர்ச்சி காணலாம் என்றாலும், நடப்பு ஆண்டில் பணவீக்கம் 6.9% ஆக வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பணவீக்கம் அதிகரிக்கலாம்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் ரஷ்யா மீது அடுத்தடுத்து தடை விதிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கமாடிட்டி விலைகள் அதிகரிக்கலாம், கச்சா எண்ணெய் விலை, சமையல் எண்ணெய் விலை, தானிய வகைகள் என பலவும் விலை உச்சம் தொடலாம் என்ற நிலையில், இது மேற்கொண்டு இந்தியாவில் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்கப்படுகிறது.
அரசின் முக்கிய நடவடிக்கை
இது நுகர்வோர் நம்பிக்கையை குறைக்கலாம். எப்படியிருப்பினும் இந்தியா மீடியம் டெர்மில் 6% வளர்ச்சி காணலாம் எனவும், இதே 2023ல் 7% வளர்ச்சி காணலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய அரசு தொடர்ந்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது மேற்கொண்டு மூலதன முதலீடுகளை ஊக்குவிக்கலாம். இதற்கிடையில் தனியார் தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி அதிகரிக்கலாம்
ஏற்கனவே இந்தியாவில் பணவீக்கம் என்பது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், எரிபொருள், கமாடிட்டி பொருட்களின் விலையேற்றம் என்பது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம். ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு மேலாகத் தான் பணவீக்கம் காணப்படுகிறது. ஏற்கனவே நடப்பு ஆண்டில் பற்பல நடவடிக்கைகளை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, இனியும் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
கடன் வளர்ச்சி அதிகரிக்கும்
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை 2023ம் ஆண்டில் 3.5% ஆக விரிவடைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.7% ஆக இருந்தது. இது அதிகரித்துள்ள பணவீக்கம், தேவை அதிகரித்துள்ள நிலையில் அதிகளவிலான இறக்குமதி என பலவும் இதனை ஊக்குவித்துள்ளன. கடன் வளர்ச்சியும் அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. இது மீடியம் டெர்மில் பொருளாதாரம் வளர்ச்சி காண வழிவகுக்கலாம்.
பொருளாதார வளர்ச்சி
மொத்தத்தில் மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சியானது மேம்பட்டு வரும் நிலையில், இதுவே இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம். இது மேற்கொண்டு இந்திய வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம்.


Click it and Unblock the Notifications