நாடு முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரை இன்று குடியரசு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றித் துவக்கி வைத்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை சூழ பாரம்பரிய முறைப்படி அழைத்து வரப்பட்ட நிலையில், 5வது முறையாக நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக உரையாற்றினார் ராம்நாத் கோவிந்த்.
2022ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கி நிலையில் மத்திய அரசு கடந்த ஒருவருடத்தில் செய்த முக்கியமான சாதனைகள் குறித்துப் பேசினார்.
ராம்நாத் கோவிந்த்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை மூலம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய அரசு 2021- 22 ஆம் நிதியாண்டில் செய்த மிக முக்கியமான சாதனைகள் குறித்து உரையாற்றினார்.
சுதந்திரம் டூ கொரோனா தொற்று
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் தனது வணக்கங்கள் தெரிவித்த ராம்நாத் கோவிந்த். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட உதவிய சுகாதாரத் துறை ஊழியர்கள், நிறுவனங்கள், குறிப்பாகத் தடுப்பூசி தயாரித்த நிறுவனங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்பரஸ்டக்டர் மிஷன்
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் 64,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்பரஸ்டக்டர் மிஷன் திட்டத்தை நாட்டின் சுகாதாரத் துறை வளர்ச்சிக்கு முக்கிய எடுத்துக்காட்டு எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
சுகாதாரத் தேவை
இந்தத் திட்டம் நாட்டின் தற்போதைய சுகாதாரத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் வரும் காலத்தில் இந்தியா எதிர்கொள்ள உள்ள பிரச்சனைகளையும் எதிர்கொள்ள முடியும் எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
யோகா, ஆயுர்வேதம்
மத்திய அரசு இந்தியச் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக யோகா, ஆயுர்வேதம், நாட்டு மருந்துகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சிகள் மூலம் இதன் புகழ் மற்றும் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் கூறினார். இதன் மூலம் கடந்த காலங்களை விடத் தற்போது இந்தியாவில் சுகாதாரக் கட்டமைப்பு பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
வேக்சின்
மேலும் இந்தியாவில் வேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உள்ளது என ராம்நாத் கோவிந்த் கூறினார். இந்தியாவில் இன்னும் 100% வேக்சின் மக்களுக்கு அளிக்கப்படாத நிலையில், இதைச் சாத்தியப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையாகப் பணியாற்றி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications