பணக்காரர்கள் மத்தியில் பொதுவாக இருக்கும் குணம், மற்றவர்களை காட்டிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பது தான். இதனால் செல்லக்கூடிய ஹோட்டல், பயன்படுத்தும் கார் முதல் தங்கம் வீடு, முதலீடு வரையில் தனித்துவமாகவே இருக்கும். இதன் அடிப்படையில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பணக்காரர்களின் விருப்பத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
முதலில் பெரும் பணக்காரர்கள் வாங்கும் வீடுகளை பார்த்தால் வில்லா, ஆடம்பர அப்பார்ட்மென்ட் என்ற வகையில் இருக்கும், ஆனால் தற்போது வித்தியாசமான ரியல் எஸ்டேட் முதலீடுகளை செய்ய துவங்கியுள்ளனர். அதுதான் ஹாலிடே ஹோம்.

அதாவது விடுமுறை நாட்களில் பயன்படுத்தவும், கொண்டாடவும், மலை பிரதேசத்தில் ஆடம்பர வீடுகளை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால் மலை பிரதேசத்தில் சாதாரண வீடுகள் கூட தற்போது அதிக விலைக்கு விற்க துவங்கியுள்ளது.
தற்போது பெரும் பணக்காரர்கள் ஹிமாச்சல பிரதேசம், உத்தரக்கண்ட் போன்ற மலை பகுதியில் சர்வ சாதாரணமாக 20 கோடிக்கும் அதிக மதிப்புடைய வீடுகள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இத்தகைய இடத்தில் அதிகம் வாங்குவது HNI என அழைக்கப்படும் பெரும் பெரும் பணக்காரர்கள் தான் என சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
மெட்ரோ நகரங்களில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து ஆடம்பரமான வீடு வாங்கினாலும் கிடைக்காத சில விஷயங்களை பெறுவதற்காகவே மலை பிரதேசத்தில் 20-30 கோடி போட்டு பெரும் பணக்காரர்கள் வீடு வாங்குகிறார்கள் என கூறுகிறாப் எல்டெகோவின் டெரா கிராண்டே நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனரான அமர் கபூர்.
இதுப்போன்ற மலை வீடுகளை வாங்கும் போது அது அரிய சொத்தாக இருக்கும், இதேபோல் இயற்கையுடன் கூடிய தனிமையான வாழ்க்கை பெற முடியும் என்பதால் இத்தகைய வீடுகளை அதிகம் வாங்குகின்றனர் எனவும் விளக்கியுள்ளார் அமர் கபூர்.
இதை ரியல் எஸ்டேட் சந்தையில் second-home மார்கெட் என அழைப்பது வழக்கம். அதாவது ஏற்கனவே வீட்டை வைத்திருக்கும் HNI பணக்காரர்கள் 2வது வீட்டை ஹாலிடே ஹோம் ஆக வாங்குவது தான். இதற்கு முன்பு டிஎல்எப், டாடா ரியாலிட்டி போன்ற நிறுவனங்கள் மலை பிரதேசத்தில் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தியிருக்காலும், பெரிய அளவிலான முன்னேற்றம் இப்பிரிவில் இல்லாத காரணத்தால் மற்ற நிறுவனங்கள் இதில் நுழையவில்லை. இத்தகைய நிலையில் மீண்டும் ஹில் ஹோம் டிரெண்ட் உருவாகியிருக்கிறது.
பெரு நகரங்களில் 100 கோடிக்கு வீடு வாங்கியுள்ள நபர்கள் மலை பிரதேசத்திலும் இதேபோன்ற ஆடம்பரத்துடன் வீட்டை வாங்க திட்டமிடுவோர் தான் இத்துறையில் முக்கிய கஸ்டமர் ஆவார்கள்.


Click it and Unblock the Notifications